பெண்களுக்கு 1.50 லட்சம் ரூபாய் காசோலையோடு விருது.! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

First Published | Dec 2, 2024, 1:34 PM IST

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஔவையார் விருது வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 31. விருது பெறுபவர்களுக்கு ரூ.1.50 லட்சம் காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

tamilnadu government

பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சொந்த தொழில் தொடங்குவதற்காக பல்வேறு திட்டங்களுக்காக மானிய உதவிகளும், கடன் உதவியும் வழங்கி வருகிறது. மேலும் மகளிர் உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய், விடியல் பயணம் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பாக விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.
 

அந்த வகையில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஔவையார் விருதுக்கு தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடேதெரிவித்துள்ளார். ஒளவையார் விருது சமூக சீர்திருத்தம். மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம். மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம் பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகசிறந்து விளங்கும் மகளிருக்கு சர்வதே சமகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவருக்கு 1.50 இலட்சத்திற்கான காசோலை. பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos


விருது பெறுவதற்கான தகுதிகள்

1. தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும். 18 வயதிற்கு மேம்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

2. குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள். சமூக சீர்த்திருத்தம், மகளிர் மேம்பாடு. மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியில், பண்பாடு. கலாச்சாரம், பத்திரிக்கை. நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகசிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.

3. பெண்களுக்கான இச் சமூக சேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாவட்ட பொதுமக்களிடமிருந்து இவ்விருதிற்கு தகுதியான விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.12.2024 வரை ஆகும். மேற்காணும் வலைதளத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும், அத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய கையேட்டினை தயார் செய்யவும் தேவையான ஆவணங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

chennai collector

 31.12.2024 வரை இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்க்கப்படும். இணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மற்றும் அனைத்து ஆவனங்களை இணைத்து முழுமையான கையேடு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 3 நகல்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 03.01.2025 மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்குமாறும். கூடுதல் விவரங்களுக்கு சிங்காரவேலனார் மாளிகை. 8-வது தளத்தில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளுமாறு சென்னை  மக்களுக்கு மாவட்ட  தெரிவித்துக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!