நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு

First Published | Dec 2, 2024, 10:57 AM IST

டிசம்பர் மாதம் தொடக்கமே மாணவர்களுக்கு குஷியாக ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் மழை பாதிப்பு காரணமாக இன்று மட்டும் 10 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

School Holidays

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான் அந்த வகையில், அக்டோபர் மாதம் விடுமுறையானது கொட்டியது. குறிப்பாக காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, தீபாவளி விடுமுறை கிடைத்தது. அதே நேரத்தில் நவம்பர் மாதம் அரசு விடுமுறை நாட்கள் பெரிய அளவில் இல்லையென்றாலும் கன மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை கிடைத்தது 

School Holiday

டிசம்பர் மாத விடுமுறை நாட்கள்

இந்த நிலையில் தான் டிசம்பர் மாதம் மாணவர்களுக்கு விடுமுறை கொட்டிக்கிடக்கும் மாதமாக அமைந்து உள்ளது. அந்த வகையில், அரையாண்டு தேர்வு இந்த மாதம் மத்தியில் தொடங்கப்படவுள்ளது. இதனையடுத்து அரையாண்டு தேர்வு விடுமுறையானது 10 நாட்கள் கிடைக்கவுள்ளது.  டிசம்பர் மாதத்தில் சனி, ஞாயிறு, கிறிஸ்துமஸ் விடுமுறை என மொத்ததமாக 14 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கவுள்ளது.

Latest Videos


CHURCH FUNCTION

கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழா

இந்தநிலையில் எனவே கூடுதல் விடுமுறை கிடைக்குமா என தவித்த பள்ளி மற்றும் மாணவர்களுக்கு குட் நியூஸ் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை ( டிசம்பர் 3 ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழா மிகவும் பிரபலமானது. இந்த தேவாலயத்தில் ஆண்டு திருவிழா நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் முதல் வாரம் வரை கொண்டாடப்படும். 

LOCAL HOLIDAY

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அந்தவகையில் உலகில் புனித சவேரியாருக்கென்று முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என வரலாற்றுச் சிறப்புகளுடன் உள்ள கோட்டார் புனித சவேரியார் பேராலய விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

school holiday

டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை

நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறைக்கு ஈடு செய்யும் வகையில் டிசம்பர் 14-தேதியன்று  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ரயில்வே ரோடு, கோட்டார் சந்திப்பு, பாறைக்கால் மடையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!