Annamalai: பீகார் மாநிலத்தைப் போலவே தமிழகத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் பெண்களின் முன்னேற்றத்திற்கும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலும் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். முதல் கட்டமாக ரூ.10000 வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை விரைவில் வழங்க உள்ளனர்.
23
காங்கிரஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை..
தேர்தலுக்காக என்னனென்ன வாக்குறுதிகள் கொடுக்கப்ட்டனவோ அதனை நிதிஷ்குமார் விரைவில் செய்து முடிப்பார். அதே போன்று நாங்கள் வெற்றி பெற்றால் 2, 3 லட்சம் ரூபாய் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் அவர்களை மக்கள் நம்பவில்லை. கடந்த 25 வருடங்களில் 20 வருடங்கள் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பை வழங்கி உள்ளனர்.
33
குடும்ப ஆட்சியை விரும்பாத மக்கள்
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தைப் போல் தமிழகத்திலும் தோல்வி நிச்சயம். குடும்ப ஆட்சி தேவையில்லை என்ற மக்களின் நிலை நாடு முழுவதும் இருக்கும் மக்களிடமும் இருக்கிறது. இது பீகாரிலும் எதிரொலித்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றுவிட்டது. கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக வை விட ஐக்கிய ஜனதா தளம் கட்சி குறைந்த எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. ஆனாலும் நிதிஷ்குமார் முதல்வராக்கப்பட்டுள்ளார். இது தான் கூட்டணி தர்மம் என்று தெரிவித்துள்ளார்.