தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளது. இதனையடுத்து ஏற்கனவே கூட்டணியில் இருந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி அணியை தமிழக பாஜக தலைமை கண்டு கொள்ளவும் இல்லை,
மதிக்கவும் இல்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி அடுத்தடுத்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தான் காரணம் என தெரிவித்தார்.