தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல் தலைதூக்கியுள்ளது. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி வருகிறார். நிர்மலா சீதாராமன் கட்சியில் கோஷ்டி பூசல்கள் இருப்பதாகக் கூறியதற்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக உட்கட்சி மோதல் தலைதூக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்து வருகிறார். டெல்லியில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தையும் புறக்கணித்திருந்தார்.
இந்த சூழலில், கடந்த வாரம் 2 நாள் பயணமாக சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர வரிசையில் மாநில நிர்வாகிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார். அந்த கூட்டத்தில் கட்சியின் நிலைப்பாடுகள் கட்சியிலிருந்து இருக்கக்கூடிய உட்கட்சி பூசல் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார்
24
நிர்மலா- அண்ணாமலை மோதல்
அதில் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தொடர்பாக சில கருத்துக்களை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. இதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினார். திட்டமிட்டு கூட்டணி அமைத்திருந்தால் பெரிய வெற்றியை பெற்றிருக்கலாம் என தெரிவித்தார்.
மேலும் கோவையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தின் போது உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியானது. அந்த வீடியோ எப்படி வெளியானது. எதற்காக மாநில தலைமை மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார். அப்போது அந்த கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்படுத்தி இருந்தது.
34
பாஜகவில் உட்கட்சி பூசல்- நிர்மலா
அதும் மட்டும் இல்லாமல் அன்றைய தினமே ஜி கே மூப்பனாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்ணாமலை மேடையில் இருக்கும் போது கட்சியில் சில கோஷ்டி பூசல்கள் இருக்கிறது. அது அனைத்தும் கலைய வேண்டும் கூட்டணியில் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் விரைவில் சரியாகிவிடும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் பாஜகவில் சில சலசலப்புகள் இருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்த கருத்து தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது . இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, நான் அரசியலில் சில விஷயங்களை கடந்து செல்லக்கூடிய ஒரு மனிதன் மாற்றம் வேண்டும் என்று நிற்கிறேன்.
நாம் செய்யக்கூடிய சில வேலைகள் வித்தியாசமாகத்தான் இருக்கும். கட்சி அங்கீகாரம் மரியாதை கூட இருக்கக் கூடிய தொண்டர்கள் இருக்கிறார்கள். இதில் சில தலைவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். அவர்களுடைய பார்வை வித்தியாசமாக இருக்கலாம். பேசுவதற்கு உரிமை உள்ளது.அரசியலில் இருந்தால் நான்கு பேர் நல்லவன் என்று சொல்வார்கள் நான்கு பேர் கெட்டவன் என்று சொல்வார்கள்.
கெட்டவன் என்று சொல்பவர்களிடம் நான் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் என்னுடைய நேரம் கழிந்து விடும் இதையெல்லாம் கடந்து செல்வோம். இதற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என அண்ணாமலை பதிலளித்திருந்தார். எனவே அண்ணாமலை பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது.