ராமதாஸோடு மல்லுக்கு நிற்கும் அன்புமணி.! நான் தான் தலைவர்- வெளியான பரபரப்பு அறிக்கை

Published : Apr 13, 2025, 07:12 AM ISTUpdated : Apr 13, 2025, 07:13 AM IST

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக ராமதாஸ் அறிவித்த நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களே தலைவரைத் தேர்வு செய்ய முடியும் என்றும், தான் தலைவராகத் தொடர்வதாகவும் அன்புமணி கூறியுள்ளார்.

PREV
16
ராமதாஸோடு மல்லுக்கு நிற்கும் அன்புமணி.! நான் தான் தலைவர்- வெளியான பரபரப்பு அறிக்கை

Who is the PMK leader? Anbumani explains பாமக தலைவர் பொறுப்பில் இருந்த அன்புமணி நீக்கப்பட்டுதாகவும், தான் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டதாக பாமக நிறுவனராக உள்ள ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனையடுத்து பல தலைவர்கள் நேரில் சென்று சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் தான் தலைவராக தொடர்வதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத  குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு, உங்களின் ஐயங்களைப் போக்கவே இந்த மடல்.

26
Anbumani Vs Ramadoss

பாமக தலைவர் பொறுப்பு

பாட்டாளி மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 28 தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்.  

அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது. கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், 

36
anbumani ramadoss

அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

பாட்டாளி மக்கள்  கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்.எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக மருத்துவர் அய்யா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன்.

எனது பணிகளுக்கு பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன். நம்முன் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய இரு இலக்குகள் உள்ளன. முதலாவது, வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது. 

46
ramadoss

சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா

இரண்டாவது, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த காலங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று நமது வலிமையை நிலை நிறுத்துவது. மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மிகச்சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது பாட்டாளி சொந்தங்களின் 12 ஆண்டு கனவு. அந்தக் கனவை நிறைவேற்றும் வகையில் சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கிய மருத்துவர் அய்யா அவர்கள்,

அதற்காக மாநாட்டுக்குழு தலைவராக என்னை நியமித்திருக்கிறார். மருத்துவர் அய்யா அவர்கள் இட்ட இந்தப் பணியை வெற்றிகரமாக முடிக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் திட்டமிடப்பட்டவாறு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

56

வலிமையான கூட்டணி அமைக்கப்படும்

அனைத்து பணிகளையும் நான் ஒருங்கிணைத்து வருகிறேன். அதே போல் மாநாட்டுக்கு பாட்டாளி சொந்தங்களை அழைத்து வருவதற்கான களப்பணிகளை அனைத்து நிலை நிர்வாகிகளும் தொடர்ந்து முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை மருத்துவர் அய்யா அவர்களது வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது பெரும் கடமையாகும். அந்தக் கடமையை  அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் சரியான நேரத்தில் செய்து முடிப்போம். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் அது தான் என் தலையாய பணியாகும்.

66

விரைவில் உங்களை தேடி வருவேன்

மாநாட்டுப் பணிகளையும் சட்டப்பேரவை தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளையும் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் களத்தில் மேற்கொள்ள வேண்டும். மீண்டும் சொல்கிறேன்... அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில்  பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை. அதற்காக உங்களை சந்திக்க விரைவில் உங்களை தேடி வருவேன் என அன்புமணி தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories