BJP National General Committee members
Sarathkumar BJP National General Committee Member :தமிழக அரசியல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், அதிமுக மற்றும் பாஜக கட்சி இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதுஒரு புறம் இருந்தாலும் தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
BJP National Executive Member, BJP National General Committee members
சென்னை வானகரத்தில் நடைபெற்ற தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக மாநில தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அண்ணாமலை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.
Sarathkumar, Annamalai, Nainar Nagendran, BJP National General Committee members
இதே போன்று தமிழிசை சவுந்தரராஜன், சரத்குமார், எச் ராஜா, கரு நாகராஜன் மற்றும் ராம சீனிவாசன் ஆகியோரும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இணைந்து வானதி சீனிவாசன், எல் முருகன் மற்றும் கே பி ராமலிங்கம் ஆகியோரும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.