டிடிவி தினகரன் விருப்பியது கண்டிப்பாக நடக்கும்; அண்ணாமலை அளித்த வாக்குறுதி!

Published : Apr 12, 2025, 03:50 PM ISTUpdated : Apr 12, 2025, 04:07 PM IST

பாஜக தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரன் விரும்பும் அரசியல் மாற்றங்கள் நிகழும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில், அண்ணாமலையின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
13
டிடிவி தினகரன் விருப்பியது கண்டிப்பாக நடக்கும்; அண்ணாமலை அளித்த வாக்குறுதி!
Annamalai and TTV Dhinakaran

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரன் விரும்பும் மாற்றங்கள் நிச்சயமாக நிகழும் என தங்களுக்குப் பூரண நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

23
TTV Dhinakaran and Edappadi Palaniswami

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அண்ணாமலை, “அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை மனதார வரவேற்கிறேன். அவர் நேற்று மருத்துவமனைக்கு செல்வது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பே என்னிடம் கூறினார். ‘தம்பி, இது முன்பே தீர்மானிக்கப்பட்ட அபாயின்மெண்ட்’ என்றார்.

அவரின் அவர் நல்ல மனசு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நாங்கள் சொன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்காதே என்றால், அப்போலோ மருத்துவர்கள்கூட இதற்கான சான்றை வழங்கியுள்ளனர்” எனப் பாராட்டினார்.

33
ADMK BJP Alliance

மேலும், “அண்ணன் தினகரன் சிறந்த மனிதர் என்பதை அவரை நன்கு அறிந்த நாங்கள் அனைவரும் உணர்ந்துள்ளோம். அவர் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்கள் நிச்சயமாக நிகழும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றும் கூறினார்.

அண்ணாமலையின் இந்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே, டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிசாமியை நீக்கிய பிறகே அதிமுக பாஜகவுடன் இணையும்” எனக் கூறியிருந்தார். ஆனால், நேற்று (ஏப்ரல் 11) எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக-பாஜக கூட்டணியை உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories