விஜய்க்காக விட்டுக் கொடுத்த அன்புமணி! கரூர் நடைபயண தேதி மாற்றம்! தளபதியின் தம்பிகள் உற்சாகம்!

Published : Sep 23, 2025, 08:11 PM IST

கரூரில் 27ம் தேதி நடைபயணம் மேற்கொள்ள இருந்த பாமக தலைவர் அன்புமணி, தவெக தலைவர் விஜய்க்காக தனது நடைபயண தேதியை மாற்றியமைத்துள்ளார். இதனால் விஜய்க்கு காவல்துறை அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
14
தவெக தலைவர் தேர்தல் பிரசாரம்

தவெக தலைவர் நடிகர் விஜய் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 13ம் தேதி திருச்சி மற்றும் அரியலூரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய விஜய், கடந்த வாரம் சனிக்கிழமை நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டார். விஜய் தனது தேர்தல் பிரசாரத்தின்போது திமுகவை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

24
கரூரில் விஜய் பிரசாரம்

விஜய் வரும் 27ம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், இந்த பிளான் மாற்றப்பட்டு அதே தேதியில் அவர் சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பயணத்திலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது விஜய் வரும் 27ம் தேதி கரூர் மற்றும் நாமக்கலில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டது.

அன்புமணியும் நடைபயணம்

அதாவது சேலத்துக்கு பதில் கரூர் மாற்றப்பட்டது. விஜய்யை போன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாசும் தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து நடைபயண பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இவரும் 27ம் தேதி கரூரில் நடை பயணம் மேற்கொள்ள இருந்தார். அன்புமணிக்கு ஏற்கெனவே காவல் துறை அனுமதி வழங்கி இருந்தது. இதனால் கரூரில் அதே நாளில் விஜய் பிரசாரத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

34
தேதியை மாற்றிய அன்புமணி

இந்நிலையில், அன்புமணி கரூரில் தனது நடை பயணத்தை 27ம் தேதியில் இருந்து 28ம் தேதிக்கு மாற்றியுள்ளார். விஜய்காக அவர் தனது நடை பயண தேதியை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய் 27ம் தேதி கரூரில் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்க்காக விட்டுக் கொடுத்த அன்புமணியை தளபதி விஜய்யின் தம்பிகளான தவெக தொண்டர்கள் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.

44
செந்தில் பாலாஜி கோட்டையான கரூர்

அண்மையில் கரூரில் திமுக முப்பெரும் விழா நடந்தது. முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி கோட்டையான கரூரில் முப்பெரும் விழாவுக்கு திமுகவினர் அலைகடலென திரண்டனர். இந்த நிலையில் விஜய் வரும் சனிக்கிழமை தனது பிரசாரத்துக்கு கரூரை தேர்வு செய்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கரூரில் தவெகவினர் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜி முறைகேடு வழக்கில் ஜாமீனில் உள்ள நிலையில், அவரை விஜய் கடுமையாக தாக்கி பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories