தந்தையை அலறவிடும் மகன்.! பாமகவை கைப்பற்ற புதிய ஸ்கெட்ச் போட்ட அன்புமணி

Published : Jun 11, 2025, 07:17 AM ISTUpdated : Jun 11, 2025, 07:41 AM IST

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், அன்புமணி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 10 மாவட்டங்களில் பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
15
பாமகவில் முற்றும் அதிகார மோதல்

அரசியல் கட்சிகளில் உட்கட்சி மோதல் இருப்பது வழக்கமான ஒன்று தான். ஒருவரை ஒருவர் காலி செய்வது, அவதூறு பரப்புவது என காலை வாரிவிடுவது என்பது அரசியலில் சகஜமான ஒன்று. ஆனால் கட்சியை கைப்பற்ற தந்தை மகனுக்குள் நடக்கும் போட்டி தான் தற்போது புதிதாக உள்ளது. அந்த வகையில் பாமக என்ற கட்சியில் யாருக்கு அதிகாரம் என அக்கட்சியை நிறுவிய ராமதாஸ்க்கும் அவரது மகனும் தலைவருமான அன்புமணிக்கும் இடையே தான் நடக்கிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே திரைமறைவில் மோதிக்கொண்டவர்கள் தற்போது வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

25
தந்தை மகன் இடையே தொடரும் போட்டி

இதன் காரணமாக பாமகவில் அன்புமணிக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளை அடுத்தடுத்து நீக்கி வருகிறார் ராமதாஸ். ஆனால் ராமதாஸ் நீக்கிய நடவடிக்கைகள் செல்லாது என அறிவித்து மீண்டும் பொறுப்பை வழங்கி வருகிறார். இதனால் மோதல் அதிகரித்துள்ள நிலையில் சமாதான நடவடிக்கைகளில் நிர்வாகிகள் இறங்கினார்கள். 

ஆனால் இரு தரப்பும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணியை மேற்கொள்வதில் பாமகவினர் திணறி வருகிறார்கள். இந்த பரபரப்பான சூழ்நிலையில் கட்சி தனது கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய அன்புமணி முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

35
பாமகவை கைப்பற்ற அன்புமணியின் திட்டம்

இதன் படி பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுவானது முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் நடைபெற இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில்

பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது. முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன என அறிவிக்கப்படுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில்,

45
பாமகவின் பொதுக்குழு கூட்டம்

1. 15.06.2025 ஞாயிறு காலை 10.00 மணி - திருவள்ளூர் மாவட்டம்

2. 15.06.2025 ஞாயிறு மாலை 03.00 மணி - செங்கல்பட்டு மாவட்டம்

3. 16.06.2025 திங்கள் காலை 10.00 மணி - காஞ்சிபுரம் மாவட்டம்

4. 16.06.2025 திங்கள் மாலை 03.00 மணி -இராணிப்பேட்டை மாவட்டம்

5. 17.06.2025 செவ்வாய் காலை 10.00 மணி - வேலூர் மாவட்டம்

6. 17.06.2025 செவ்வாய் மாலை 03.00 மணி -திருப்பத்தூர் மாவட்டம்

7. 18.06.2025 புதன் காலை 10.00 மணி - திருவண்ணாமலை மாவட்டம்

8. 18.06.2025 புதன் மாலை 03.00 மணி - கள்ளக்குறிச்சி மாவட்டம்

9. 19.06.2025 வியாழன் காலை 10.00 மணி -சேலம் மாவட்டம்

10. 19.06.2025 வியாழன் மாலை 03.00 மணி -தருமபுரி மாவட்டம்

55
நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு

மேற்கண்ட அனைத்து மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள். சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர், 

மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories