பள்ளிகளில் பாதிப்பு என்ன.?
இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுக்கான பாடத்திட்டங்கள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் இரண்டாம் தேதியிலிருந்து செய்முறை தேர்வுகள் நடைபெற வேண்டிய காலம். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் மாவட்டங்களில் அரையாண்டு செய்முறை தேர்வு நடத்த முடியாத சூழல் இருந்தால் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க கூறியுள்ளோம்.
மாணவர்களின் நலன் தான் முக்கியம். எந்த எந்த மாவட்டத்தில் எந்த அளவில் பள்ளிகளில் மழை பாதிப்பு உள்ளது.? மின்சார பிரச்சனை உள்ளதா.? உள்ளே நுழையமுடியாத நிலை உள்ளதா என்பது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது. அதன் படி தலைமை ஆசிரியர் மூலமாக தகவல் பெற்று தேர்வு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.