Actor Mansoor Ali Khan
மன்சூர் அலிகான்- சிக்கலில் மகன்
பிரபல திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான், பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி பலமுறை சிக்கலில் மாட்டியுள்ளார். மேலும் அரசியலில் களம் இறங்கி தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இவரது மகன் அலிகான் துக்ளக்கை கதாநாயகனாக வைத்து கடந்த 2019ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்றையும் மன்சூர் அலிகான் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் கார்த்திகேயன் என்ற நபர் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் 10 பேரை போதைப்பொருள் விற்பனை தொடர்பாக ஜெ.ஜெ நகர் போலீசார் கைது செய்தனர்.
mansoor alikhan
போதைப்பொருள் வழக்கு
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆன்லைன் மூலம் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் கஞ்சா, மேஜிக் காளான், மெத்தம்பெட்டமைன் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கார்த்திகேயன் மொபைல் போனை போலீசார் சோதனை மேற்கொண்டபோது யாரெல்லாம் போதைப்பொருட்களை வாங்கினார்கள் என்ற தகவல் கிடைத்தது.
alikhan
அலிகான் துக்ளக் கைது
அதில், திரைப்பட நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், கார்த்திகேயன் மூலம் ஆன்லைன் மூலம் போதைப்பொருட்கள் வாங்கி பயன்படுத்தியதாகவும், அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
arrest
அலிகான் துக்ளக் சிறையில் அடைப்பு
இதனையடுத்து திருமங்கலம் போலீசார் கடந்த 2 நாட்களாக அலிகான் துக்ளக் மற்றும் அவரது நண்பர்கள் செய்யது சாகி, மொஹம்மது ரியாஸ் அலி, பைசல் அஹமது ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் மேஜிக் காளான் மற்றும் மெத்தம்பெட்டமைன் ஆகிய பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மருத்துவ பரிசோதனையில் மூலம் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து இந்த 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.