school teacher
மாணவர்களின் இன்றைய கல்வி வளர்ச்சி
இன்றைய பள்ளி மாணவர்கள் தான் நாளைய எதிர்காலம் என்ற அடிப்படையில் ஆரம்ப கல்வி தான் மாணவர்களின் அடிப்படை கல்வியாக உள்ளது. அந்த வகையில் நவீன காலத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன் படி பள்ளிகளிலையே ஸ்மார்ட் போர்டு மூலம் கல்வி கற்கும் வசதியானது உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் கல்வியை புரிந்து படிக்கும் வகையில் வீடியோ வடிவில் பாடங்களும் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக மேல் நாட்டிற்கு இணையாக கல்வி வளர்ச்சியானது அதிகரிக்கப்பட்டுள்ளது.
school teacher teaching training
தமிழக அரசின் திட்டங்கள்
மேலும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எந்த கல்வியை கற்றுக்கொள்கிறார்களோ அதே போன்ற கல்வியானது அரசு பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு போட்டியாக அரசு பள்ளி மாணவர்களும் தேர்வில் அதிக மதிப்பெண்களை வாங்கி வருகிறார்கள்.
மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் படி கல்வி உதவி தொகை, காலை, மதிய உணவு திட்டம், இலவச புத்தகம், காலணி, இலவச சைக்கிள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
english language teaching training
ஆசிரியர்களுக்கு பயிற்சி
இதுமட்டுமில்லாமல் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம்,பொறியல் படிப்புகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களும் ஒதுக்கப்படுகிறது. மேலும் அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் உயர் கல்வியில் பயிலும் போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறனை அதிகப்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
teaching training
பெங்களூரில் ஆங்கில மொழி பயிற்சி
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளது.
அதன் படி கல்வி தொடர்பாக தனியார் நிறுனவங்கள் மற்றும் அமைப்புகள் திறன்சார் பயிற்சியை அளித்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள தென்னிந்திய மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தல் குறித்த பயிற்சி வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
teacher training program
விருப்பமுள்ள ஆசிரியர்கள் பங்கேற்கலாம்
எனவே அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கெனவே பயிற்சி பெற்ற ஆசிரியர்களை தவிர்த்து, விருப்பமுள்ள ஆசிரியர்களை கண்டறிந்து பங்கேற்கச் செய்ய வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கு செல்ல விரும்பும் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்போது உரிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
government school teachers english training
பயிற்சி வகுப்புகள் எப்போது.?
ஆசிரியர்களின் அனைத்து விவரங்களும் அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கையொப்பமிட்டு ஜனவரி(இன்றுக்குள்) 7 ஆம் தேதிக்குள் மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் தொடர்பான பயிற்சி முகாமானது ஜனவரி 16 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.