பண்ணாரி அம்மன் கோயிலில் திடீரென தீயில் இறங்கிய அமுதா ஐஏஎஸ்! அதிர்ந்துபோன பக்தர்கள்! வைரல் போட்டோ!

Published : Apr 08, 2025, 08:31 AM ISTUpdated : Apr 08, 2025, 08:57 AM IST

ஈரோடு பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். 

PREV
14
பண்ணாரி அம்மன் கோயிலில் திடீரென தீயில் இறங்கிய அமுதா ஐஏஎஸ்! அதிர்ந்துபோன பக்தர்கள்! வைரல் போட்டோ!
Erode bannari amman temple

புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து உள்ள வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா , கேரளா பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அதிகாலை 4 மணி முதல் மாலை வரை தொடர்ந்து 12 மணி நேரம் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். 

24
bannari amman temple Festival

திருவீதி உலா

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பண்ணாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சபரத்தில் வைக்கப்பட்டு  சத்தியமங்கலத்தை சுற்றி உள்ள கிராம பகுதிகளில் திருவீதி உலா வந்து அருள்பாலிக்கப்பட்டது.

இதையும் படிங்க: காற்றழுத்த தாழ்வுப்பகுதி! விடாமல் வெளுத்து வாங்கப்போகுதாம் மழை? வானிலை மையம் சொல்வது என்ன?

34
Bannari Amman Temple kundam

குண்டம் திருவிழா

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று அதிகாலை 4 மணியளவில் கோவில் பூசாரி முதலில் குண்டத்திற்கு பூஜைகள் செய்த பிறகு குண்டத்தில் இறங்கினார். பின்னர்  கடந்த இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான  பொது மக்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். இதற்காக தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா  உள்ளிட்ட  பல்வேறு மாநிலங்களை  சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். 

44
Amudha IAS

கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ்

இந்நிலையில் தனது சுறுசுறுப்பால் எந்த துறை கொடுத்தாலும் சாதித்து காட்டி அனைவரின் கவனத்தை ஈர்த்த தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் இந்த பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் கலந்து கொண்டார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் அமுதா என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.  இன்று குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்று ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories