பாஜக மாநில தலைவர் யார்.? நள்ளிரவில் திடீரென டெல்லிக்கு புறப்பட்ட முக்கிய நிர்வாகி
தமிழக பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலை விலகிய நிலையில், நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலை விலகிய நிலையில், நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Tamil Nadu BJP leader : மத்தியில் 2014ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வரும் பாஜக, அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் ஆட்சியை கொண்டுவர பல்வேறு திட்டங்களை வகுத்தது. இதற்கு ஏற்றார் போல வட மாநிலங்களில் ஆட்சியை பிடித்து அசத்தியது. இதே போல தென் மாநிலங்களிலும் படிப்படியாக ஆட்சி அமைக்க வழி வகுத்தது. கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த பாஜக அடுத்ததாக ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழ்நாடு என குறி வைத்தது. இதற்கு ஏற்றார் போல குக்கிராமங்கள் வரை பாஜகவை வளர்த்தது. பல்வேறு கட்சியின் முக்கிய நிர்வாகிள் பாஜகவிற்கு பல்டி அடித்தனர்.
தமிழக பாஜக தலைவர்கள்
அந்த வகையில் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அடுத்தடுத்து தலைவர்களை நியமித்தது. அந்த வகையில் 2014ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சி அமைந்த பிறகு தமிழக பாஜக தலைவராக தமிழிசையை நியமித்தது. இவரது தீவிர அரசியல் காரணமாக தமிழகம் முழுவதும் பாஜக வேகமாக வளர்ந்தது.
இதற்கு அடுத்ததாக எல். முருகனும் வேல் யாத்திரனை உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி பாஜகவை வலுப்படுத்தினார். இதன் காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டசபைக்குள் பாஜக எம்எல்ஏக்கள் காலடி எடுத்து வைத்தனர். அடுத்ததாக கடந்த 2021ஆம் ஆண்டு பாஜக மாநில தலைவராக அண்ணாமலையை தேசிய தலைமை நியமித்தது.
அண்ணாமலையின் அதிரடி அரசியல்
தனது அதிரடி அரசியல் காரணமாக ஆளுங்கட்சியாக இருந்த திமுகவிற்கு கடும் போட்டியாக இருந்தார். மேலும் தமிழகத்தில் எதிர்கட்சி பாஜக தான். அதிமுக இல்லையென கூறும் அளவிற்கு பட்டி தொட்டியெங்கும் பாஜகவை கொண்டு சென்றார். அண்ணாமலையின் அரசியல் தமிழக மக்களை திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் அதுவே அண்ணாமலைக்கு எதிராக திரும்பியது.
கூட்டணி கட்சியான அதிமுகவை கடுமையாக விமர்சித்ததால் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதனால் அதிமுகவும்- பாஜகவும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் தவித்தது. இதனையடுத்தும் அதிமுக தலைவர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
அதிமுகவிற்கு அண்ணாமலை எதிர்ப்பு
மீண்டும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என அறிவித்தார். இந்த நிலையில் அரசியல் மாற்றம் காரணமாக மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கவுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளாத அண்ணாமலை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக புதிய பாஜக மாநில தலைவரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக தொடங்கியுள்ளது. இதன் படி பாஜக மாநில தலைவர் ரேஸில் தற்போது முன்னிலையில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை ஆகியோர் உள்ளனர்.
புதிய தலைவர் யார்.?
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நயினார் நாகேந்திரன் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். பாஐக தேசிய தலைமை அழைப்பின் பேரில் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக இன்னும் ஓரிரு நாட்களில் நியமிக்கப்படக்கூடும் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.