அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட துணைப்பொதுச்செயலாளர் மாணிக்க ராஜா தனது ஆதரவாளர்கள், 3 மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். மேலும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிருப்தியில் திமுகவில் இணைந்துள்ளதாக விளக்கம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அமமுக போட்டியிட்ட நிலையில், அதிமுக அந்த கூட்டணிக்கு வந்ததும் கூட்டணியில் இருந்து வெளியேறினார். மேலும் பழனிசாமி ஒரு துரோகி, அவரை ஒருபோதும் நாங்கள் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டிடிவி தினகரன் அமமுகவை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துள்ளார். இதற்கு அமமுக மூத்த நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
23
அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாணிக்க ராஜா
இந்நிலையில் இன்றைய தினம் அமமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணித்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கழக துணப்பொதுச் செயலாளர் மாணிக்கராஜா அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவரடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
33
திமுகவில் இணைந்த மாணிக்க ராஜா
இந்த நிலையில் அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாணிக்கராஜா முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்கள், 3 அமமுக மாவட்டச் செயலாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டதற்கன காரணம் அனைவருக்குமே தெரியும். ஆனால் தற்போது அதனை மறந்துவிட்டு மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
20 ஆண்டு கால நண்பரென்ற முறையில் இந்த முடிவை கைவிடுமாறு டிடிவி தினகரனிடம் சொன்னோம். ஆனால் அதனை அவர் கேட்பதாக இல்லை. தற்போதைக்கு 3 மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் இங்கு வந்துள்ளனர். இன்னும் பலர் திமுகவில் இணைய உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.