தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்து வரும் நிலையில், அரசுக்கு முக்கிய வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் கடைகள் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு காலத்தில் ஊருக்கு பயந்து மது குடிக்கவே பயந்து பயந்து போன காலம் போய் தற்போது ஆண்கள் முதல் பெண்கள் வரை சர்வ சாதாரணமாக கையில் மதுபாட்டிலுடன் வளம் வருகின்றனர். குறிப்பாக தற்போதைய காலக்கட்டத்தில் அதிகளவில் இளம் வயதினர் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் மது அருந்துகின்றனர். இதனால் தமிழகத்தில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
25
டாஸ்மாக் கடைகள்
அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனை அரசு எடுத்து நடத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெற்று வருகிறது. வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வருமானம் இரட்டிப்பாகும். தமிழக அரசுக்கு வருமானத்தை கொட்டிக்கொடுக்கும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் இருந்து வருகிறது. இந்த நிதி மூலம் பல மக்கள் நல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
35
தீபாவளி, பொங்கல் நாட்களில் டாஸ்மாக் கடைகள்
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் மதுவிற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் இருந்தாலும் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. டாஸ்மாக் துறையை அரசு எடுத்து நடத்தி வந்தாலும் இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என விஷேச நாட்களில் கூட விடுமுறை என்பதே இல்லை.
ஆண்டுக்கு மொத்தம் 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் ஊழியர்களுக்கு விடுமுறை கிடைக்கிறது. இதனிடையே ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் குருபூஜை நாட்கள், கோயில், மசூதி, தேவாலய விழாக்களின் நேரத்திலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்.
55
ஜனவரி 26 டாஸ்மாக் கடைகள் மூடல்
இந்நிலையில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.