தமிழகத்தில் கூட்டணி ஆட்சி.! முதல்வராக EPS பெயரைக் குறிப்பிடாத அமித்ஷா- ஷாக்காகி நிற்கும் அதிமுக

Published : Jun 27, 2025, 12:50 PM ISTUpdated : Jun 27, 2025, 12:52 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், கூட்டணி ஆட்சி அமைப்போம் என பாஜக கூறி வருகிறது. ஆனால் அதிமுக இதனை மறுத்து வருகிறது. இந்த நிலையில்  அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என மீண்டும் உறுதி செய்துள்ளார்.

PREV
14
தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் கள நிலவரம், மக்களின் மன நிலை, வாக்கு சதவிகிதம் போன்றவற்றை ஆய்வு செய்து வருகிறது. மேலும் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம், ஒன் டூ ஒன் ஆலோசனை, மாவட்ட செயலாளர்களோடு ஆலோசனை என விரைவுப்படுத்தி வருகிறது. 

அதே நேரத்தில் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையும் எழுந்துள்ளது. அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுதைகள், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட கூட்டணியானது கடந்த 8 வருடமாக நீடித்து வருகிறது. அதே நேரம் அதிமுக கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

24
தமிழகத்தில் பிரிந்து கிடக்கும் அதிமுக

இதற்கு முக்கிய காரணமாக அதிமுகவை இரும்பு கோட்டையாக மாற்றிய ஜெயலலிதாவின் மறைவு, இதனை தொடர்ந்து அதிகார போட்டி காரணமாக கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால் முக்கிய தலைவர்கள் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி என 4 பிளவுகளாக கட்சி பிரிந்துள்ளது. இதனால் வாக்குகள் பிரிந்து வெற்றியானது எட்டாக்கனியாக மாறியுள்ளது.

அடுத்தடுத்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களில் தொடர் தோல்வியை பெற்று வருகிறது. 2019ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக 2024ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பிரிந்தது. இனி பாஜகவுடன் கூட்டணியே இல்லையென அறிவித்த திடீரென கடந்த மாதம் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவோம் என கூறியுள்ளது.

34
பாஜகவுடன் கூட்டணி- அதிமுகவிற்கு செக்

அதே நேரம் தற்போது வரை அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணையாமல் உள்ளது. தேர்தல் நெருக்கத்தில் இந்த இரண்டு கட்சிகளும் அதிமுக- பாஜகவோடு இணையும் என கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என பாஜக கூறி வருகிறது. அதிமுகவோ இதனை மறுத்து வருகிறது. கூட்டணி மட்டுமே கூட்டணி ஆட்சி இல்லையென தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என மீண்டும் உறுதி செய்துள்ளார். ஆட்சியில் பாஜக பங்கெடுக்கும் எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும், தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதல்அமைச்சராக அ.தி.மு.க.வில் இருந்து வருவார் என அமித்ஷா கூறினார்.

44
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி- பாஜக உறுதி

அதே நேரம் முதலமைச்சராக அமித்ஷா யாருடைய பெயரையும் கூறவில்லை. எடப்பாடி பழனிசாமி பெயரை உச்சரிக்கவும் இல்லை. எனவே அதிமுகவில் வேறு யார் முதலமைச்சராக வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்த செங்கோட்டையனா.? பாஜகவின் ஆதரவாக இருக்கும் எஸ்.பி.வேலுமணியா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஆனால் அதிமுகவினோர தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராக வருவார் என கூறிவருகின்றனர். இந்த நிலையில் பாஜகவின் தலைமையின் கருத்து அதிமுக மூத்த தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories