தமிழ்நாட்டில் பணக்கார வேட்பாளர் தவெக தலைவர் விஜய் இல்லை... அதிமுக வேட்பாளர்.. சொத்து மதிப்பு ரூ.1048 கோடி

Published : Apr 07, 2026, 10:27 AM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் ரூ.600 கோடி சொத்து மதிப்புடன் பணக்கார வேட்பாளராக கருதப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் ரூ.1048 கோடி சொத்துடன் முதலிடத்தில் உள்ளார்.

PREV
16
தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி கடந்த மார்ச் 15ம் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. முன் எப்போது இல்லாத வகையில் இம்முறை தமிழக சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதறகு முக்கிய காரணம் தவெக தலைவர் விஜய் வருகை. இவர் தமிழக அரசியல் எந்த விதமாக தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் யார் ஓட்டை பிரிக்க போகிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

26
தவெக தலைவர் விஜய்

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் களம் இறங்குகிறார். இவர் தனது வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார். அதில் விஜய்க்கு ரூ.404.58 கோடி அசையும் சொத்துக்களும், அசையா சொத்துகளின் நடப்பு சந்தை மதிப்பு ரூ.220.15 கோடி எனவும் தெரிவித்துள்ளார். மொத்தமாக ரூ.600 கோடிக்கும் மேல் சொத்து மதிப்புடன் விஜய் முதலிடத்தில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தமிழக பணக்கார வேட்பாளர் பட்டியலில் அதிமுக வேட்பாளர் முதலிடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

36
அதிமுக லீமா ரோஸ்

இந்நிலையில் தமிழ்நாட்டு சட்டப்பேரவை தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று அதிமுக, திமுக, தவெக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். இதில் தமிழக பணக்கார வேட்பாளர் பட்டியலில் லீமா ரோஸ் சமீபத்தில் ஐஜேகே கட்சியில் இருந்து விலகி பிப்ரவரி 17ம் தேதி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக இணைந்தார். கட்சியில் சேர்ந்த உடனே மகளிர் அணி இணை செயலாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில் தற்போது லால்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வாங்கப்பட்டுள்ளது.

46
லீமா ரோஸ் சொத்து மதிப்பு

இந்நிலையில் தனது வேட்பு மனுவில் லீமா ரோஸ் தன்னிடம் ரூ.1048 கோடி சொத்துகளும், தனது கணவர் லாட்டரி அதிபர் மார்ட்டின் பெயரில் ரூ.4,159 கோடி மதிப்பிலான சொத்துக்களும், மகன் ஜோஸ் மார்டின் பெயரில் ரூ.665 கோடி சொத்துகளும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது பெயரில் நகைகள் உள்பட ரூ. 139.62 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளையும், நிலம் மற்றும் வீடுகள் உள்பட ரூ.909.94 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

56
மார்ட்டின் பெயரில் ரூ. 3,262.01 கோடி அசையும் சொத்து

கணவர் மார்ட்டின் பெயரில் ரூ. 3,262.01 கோடி அசையும் சொத்துக்களையும் ரூ. 887.36 கோடி அசையா சொத்துக்களும், மகன் ஜோஸ் மார்ட்டின் ரூ. 225.56 கோடி அசையும் சொத்துகளையும் ரூ. 439.21 கோடி அசையா சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

66
தேர்தல் பத்திரங்கள் சர்ச்சை

தேர்தல் பத்திரங்கள் மூலம் சர்ச்சையில் சிக்கிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மற்றும் மகன் ஜோஸ் சார்லஸ் இவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும், மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் களமிறங்கியுள்ளனர். தேர்தல் பத்திரங்கள் மூலமாக லாட்டரி மார்ட்டின் நிறுவனம் திமுகவுக்கு சுமார் ரூ. 509 கோடியையும், திரிணமூல் காங்கிரஸுக்கு ரூ. 542 கோடியையும், பாஜகவுக்கு ரூ. 100 கோடியையும் நன்கொடையாக வழங்கி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories