அதிமுக - பாஜக கூட்டணி! துப்பாக்கி முனையில் நடந்த கட்டாயத் திருமணம்! கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

Published : Apr 18, 2025, 01:47 PM ISTUpdated : Apr 18, 2025, 01:51 PM IST

இஸ்லாமிய நிர்வாகிகள் அதிமுகவின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அதிமுக அடிமட்ட தொண்டர்கள் இக்கூட்டணியை விரும்பவில்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

PREV
15
அதிமுக - பாஜக கூட்டணி! துப்பாக்கி முனையில் நடந்த கட்டாயத் திருமணம்! கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!
Edappadi Palanisamy

AIADMK - BJP Alliance: இனி பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியிருந்தார். இந்நிலையில் திடீரென டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். இதனையடுத்து சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 

25
AIADMK - BJP Alliance

அதிமுக -  பாஜக கூட்டணி

இந்நிலையில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது முதல் கட்ட தலைவர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். 
அதாவது பல்வேறு மாவட்டங்களில் உள்ள இஸ்லாமிய நிர்வாகிகள் அதிமுகவின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி துப்பாக்கி முனையில் நடந்த கட்டாயத் திருமணம் போன்றது என கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 

இதையும் படிங்க: என்னோட அனுமதி இல்லாமல் யாரும் தேவையில்லாமல் பேசாதீங்க! இபிஎஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை! என்ன காரணம்?

35
karti chidambaram

கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: அதிமுக - பாஜவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மை மக்கள், தமிழ் உணர்வு உடையவர்கள் பெரும்பாலானோர் அதிமுகவை ஏற்கவில்லை. அடிமட்ட தொண்டர்களும் ஏற்கவில்லை என்ற காரணத்தால் தான் பிரிந்தார்கள். தற்போது தேர்தல் அரசியலை தாண்டிய கட்டாய காரணங்களுக்காக வலுக்கட்டாயமாக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

45
Forced marriage

துப்பாக்கி முனையில் நடந்த கட்டாயத் திருமணம்

 கடந்த மூன்று நாட்களாக கிராமப்புற பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, அதிமுக அடிமட்ட தொண்டர்கள் இக்கூட்டணியை விரும்பாத நிலையை காண முடிந்தது. அதிமுக - பாஜக கூட்டணி, துப்பாக்கி முனையில் நடந்த கட்டாயத் திருமணம் போன்றது. விரும்பி இந்த கூட்டணி வந்தது போல் தெரியவில்லை. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தருணங்களிலும் வெவ்வோறு முரண்பாடுகள் இருகட்சியினருக்குள் வெளிப்படுகிறது. 

இதையும் படிங்க: பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு.! அடுத்தடுத்து விலகும் அதிமுக நிர்வாகிகள்- இபிஎஸ் ஷாக்

55
karti chidambaram vs BJP

இந்தியா கூட்டணி வெற்றி பெறும்

எனவே வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். பாஜக எப்போதும் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாகத்தான் பார்க்கின்றனர் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories