தூத்துக்குடியைச் சேர்ந்த கள்ளக்காதல் ஜோடியான தங்கவேல்சாமி மற்றும் பார்வதி, குடும்பத்தினர் பிரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் விஷம் அருந்தினர். பின்னர் தங்களைக் காப்பாற்றுமாறு குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மகன் தங்கவேல்சாமி (28). கார் ஓட்டுநர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தங்கவேல்சாமி கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். அப்போது எதிர்வீட்டில் வசித்த வசித்த ஆட்டோ ஓட்டுநர் சுப்பையா மனைவி பார்வதியுடன் (33) தங்கவேல்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
24
விஷம் குடித்த ஜோடி
இந்த விவகாரம் நாளடைவில் இரு குடும்பத்தாருக்கும் தெரியவந்ததை அடித்து கண்டித்துள்ளனர். இந்நிலையில் பார்வதி வீட்டை விட்டு வெளியேறி தங்கவேல்சாமியுடன் சென்றார். இதனால் இரண்டு குடும்பத்தாரும் தேடிவந்தனர். மேலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் திட்டமிட்டனர். இதனிடையே தங்கவேல்சாமி குலசேகரன்பட்டினத்துக்கு காரில் பார்வதியை அழைத்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது நாம் வீட்டுக்கு சென்றால் குடும்பத்தினர் நம்மை வாழ விடமாட்டார்கள் பிரித்து விடுவார்கள் என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி தங்கவேல்சாமி, பார்வதி ஆகியோர் விஷத்தை குடித்தனர்.
34
குலசேகரன்பட்டினம் காவல் நிலையம்
இதனால் வாயில் நுரை தள்ளியவாறு உயிருக்கு போராடிய அவர்கள் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்துக்கு காரில் சென்றனர். காவல் நிலையத்துக்கு வெளியில் காரை நிறுத்திய அவர்கள் 2 பேரும் நாங்கள் விஷம் குடித்து விட்டோம், எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கதறியபடி கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குலசேகரன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பாதி வழியிலேயே தங்கவேல்சாமி, பார்வதி ஆகிய இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் ஜோடி காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.