அந்த தியாகி யார்.? சட்டசபையில் திமுக அமைச்சர்களை களங்கடிக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் 'அந்த தியாகி யார்?' என்ற பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். டாஸ்மாக் முறைகேடுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த போராட்டம் அமைந்தது.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் 'அந்த தியாகி யார்?' என்ற பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். டாஸ்மாக் முறைகேடுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த போராட்டம் அமைந்தது.
Who is that martyr : தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிற்கு கடும் சவாலாக போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது அதிமுக, அந்த வகையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் தொடர் கொலை கொள்ளை சம்பவங்களுக்கு எதிராக கண்டன போராட்டங்களும் நடத்தியது. அடுத்ததாக அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார் என்ற கேள்வியோடு தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு
மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுடன் தொடர்புடைய அந்த சார் யார் எனவும் கேள்விகள் கேட்கப்பட்டு வந்தது. அடுத்ததாக தமிழக சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்து பங்கேற்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த மாதம் அமலாக்கத்துறை டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில் சுமார் 1000 கோடி ரூபாய் வரை முறைகேடு கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது.
அந்த தியாகி யார்.?
இதனையடுத்து அதிமுக சார்பாக திமுக அரசை விமர்சித்து போராட்டங்களும் நடைபெற்றது. அப்போது மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக அதிமுகவினர் விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார்.? என்ற தலைப்பில் பேட்ஜ் அணிந்து பங்கேற்றுள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது.
அந்த தியாகி யார்.? அதிமுக போராட்டம் ஏன்.?
இதில் பங்கேற்க வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த தியாகி யார்.? என்ற பேட்ஜ் அணிந்துள்ளனர். அந்த எழுத்திற்கு கிழே டாஸ்மாக் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையை மையமாக வைத்து டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடப்பதை வெளிப்படுத்தும் விதமாக பேட்ச் அணிந்து சட்டமன்றத்திற்கு வந்துள்ளளதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.