பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு.! அடுத்தடுத்து விலகும் அதிமுக நிர்வாகிகள்- இபிஎஸ் ஷாக்

Published : Apr 18, 2025, 08:08 AM IST

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி முடிவுக்கு அதிமுகவின் சில இஸ்லாமிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். பல மாவட்ட நிர்வாகிகளும் பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

PREV
14
பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு.! அடுத்தடுத்து விலகும் அதிமுக நிர்வாகிகள்- இபிஎஸ் ஷாக்

ADMK  Leaders Resignation : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்தும் வகையில் அதிமுக பலம் வாய்ந்த கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்தது.

இதன் படி நடிகர் விஜய்யின் தவெகவை தங்கள் அணிக்கு இழுக்க திட்டமிட்டது. ஆனால் 50 சதவிகித தொகுதியை கேட்டதால் வெறு புதிய கூட்டணியை உருவாக்க அதிமுக திட்டமிட்டது. அந்த வகையில் பாஜகவுடன் மீண்டும் தேர்தலில் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிட்டது.

24
AIADMK BJP Alliance

அதிமுக- பாஜக கூட்டணி

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வரை பாஜகவுடன் எப்போதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்திருந்த நிலையில் திடீர் பல்டி அடித்து பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். இந்த நிலையில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது முதல் கட்ட தலைவர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதா என யோசித்து வருகிறார்கள்.

34
Alliance Politics

அதிமுகவில் இருந்து விலகும் நிர்வாகிகள்

இந்த நிலையில் அதிமுகவில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இஸ்லாமிய நிர்வாகிகள் தலைமையின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். காரைக்காலைச் சேர்ந்தவர் கேஏயு.அசனா, அதிமுக முன்னாள் எம்எல்ஏவான இவர், காரைக்கால் மாவட்ட இணைச் செயலாளராக இருந்தார்.

இந்நிலையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதே போல நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தெத்தி ஊராட்சி பகுதியை சேர்ந்த கிளைச்செயலாளர் பக்கீர் மையில் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 

44
Muslim Leaders Resignation

அதிருப்தியில் இஸ்லாமிய நிர்வாகிகள்

இது தொடர்பாக கட்சி தலைமைக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், சிறுபான்மை சமூகமாகிய இஸ்லாமியர்ளே பழிவாங்கி கொண்டிருக்கும் பாஜக வோடு கூட்டணி அமைத்துள்ள நிலையில் அ.இ.அ.தி.முக.வில் 53.ஆண்டு கால கழப்பணியில் இருந்தும் கட்சி எனக்கு வழங்கிய கிளை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அடிப்படை  உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கணத்த இதயத்தோடு விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இதே போல பல மாவட்டங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகள் பாஜகவோடு மீண்டும் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திலேயே பாஜக கூட்டணிக்கு எதிராக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Read more Photos on
click me!

Recommended Stories