தமிழகத்தில் திமுக கூட்டணி 36 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. நடிகர் விஜய்யின் தலையீட்டால் எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து திமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தொகுதி, தொகுதியாக, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகிறது.
எனவே தமிழகத்தை பொறுத்தவரை 4 முனை போட்டியானது தற்போது வரை உறுதியாகியுள்ளது. திமுக- அதிமுக- நாம் தமிழர்- தவெக என கட்சிகள் தேர்தல் போருக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு என்ன என தற்போதைய கருத்து கணிப்பு வெளியாகி அதிமுக- பாஜக கூட்டணிக்கு ஷாக் கொடுத்துள்ளது.
24
தமிழகத்தில் எந்த கட்சிக்கு செல்வாக்கு
அந்த வகையில் இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் ஆகியவை இணைந்து Mood of the Nation என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக மற்றும் பாஜகவை வாஷ் அவுட் செய்த திமுக கூட்டணி 47 சதவிகித வாக்குளை பெற்றிருந்தது.
இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்து கணிப்பில் திமுக கூட்டணியின் செல்வாக்கு 52 சதவிகிதமாக உயர்ந்திருந்தது. தற்போது அந்த சதவிகிதம் 48 சதவிகிதமாக குறைந்திருப்பதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
34
கருத்து கணிப்பு முடிவு என்ன.?
தற்போது தமிழகத்தில் மக்களவைக்கான தேர்தல் நடைபெற்றால் திமுக கூட்டணி ஒட்டுமொத்த 39 தொகுதிகளில் 36 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் அதிமுக- பாஜக கூட்டணிக்கு வெறும் 3 தொகுதிகள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக திமுகவிற்கு எதிரான எதிர்ப்பு வாக்குகளை நடிகர் விஜய் தனக்கு சாதகமாக பிரிப்பதால் எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து திமுக கூட்டணிக்கு வெற்றிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த பிப்ரவரியில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பின் போது அதிமுக- பாஜக தனித்தனியாக இருந்த நிலையில் வாக்கு சதவிகிதம் 21 சதவிகிதமாக இருந்ததாகவும். தற்போது கூட்டணி உருவான நிலையில் 37 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் தவெக தற்போது தேர்தல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், நாம் தமிழர் உள்ளிட்ட பிற கட்சிகளின் வாக்கு சதவீதம் 15 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும் Mood of the Nation கருத்து கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் நாடு முழுவதும் தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்றால் பாஜக கூட்டணி மொத்தம் 324 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், இந்தியா கூட்டணிக்கு 208 தொகுதிகள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருப்பதாக இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய Mood of the Nation கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.