ஷாக்கிங் நியூஸ்! விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!

Published : Dec 09, 2025, 09:26 AM IST

TVK Vijay Meeting: கரூர் சம்பவத்திற்குப் பிறகு புதுச்சேரியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற விஜய் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்திற்கு கைத்துப்பாக்கியுடன் வந்த நபர் மெட்டல் டிடெக்டர் சோதனையில் பிடிபட்டார். 

PREV
14
தவெக தலைவர் விஜய்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் தொடங்கினார்.இதனையடுத்து அரியலூர், நாகை, திருவாரூரில் ரோடு ஷோக்கள் மூலம் மக்களை சந்தித்தார். இந்நிலையில் கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி விஜய் நடத்திய ரோடு ஷோ-வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

24
தனியார் கல்லூரியில் நடைபெற்ற விஜய் சந்திப்பு

இந்த சம்பவத்தை அடுத்து திட்டமிட்ட அனைத்து பிரசாரமும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரோடு ஷோக்களை விஜய்க்கு நடத்தவில்லை. அரசும் அனுமதி கொடுக்கவில்லை. அண்மையில் காஞ்சிபுரம் மாவட்ட மக்களை தனியார் கல்லூரியின் உள் அரங்கில் விஜய் சந்தித்து பேசினார்.

34
புதுச்சேரி ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு

இதனையடுத்து புதுச்சேரி ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பொதுக்கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அதாவது புதுச்சேரி பொதுக் கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தவெகவினர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கூடாது. இக்கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தவெக வழங்கிய கியூ ஆர் கோட் அடங்கிய பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

44
துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு

கரூர் சம்பவத்தை போன்று எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக புதுச்சேரி உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெறும் விஜய் பரப்புரை கூட்டத்திற்கு கைத்துப்பாக்கியுடன் வந்த நபரால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொண்டர்களை கூட்ட அரங்கில் அனுமதித்த போது மெட்டல் டிடெக்டரால் மூலம் அவர் பிடிப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியதில் தவெக சிவகங்கை மாவட்டச் செயலாளரின் தனிப் பாதுகாவலர் டேவிட் என்பவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் துப்பாக்கி வைத்திருக்க டேவிட் உரிமம் பெற்றிருந்தாரா? என்பது தொடர்பாக புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories