பத்திர பதிவு செய்யப்போறீங்களா.! பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளிட்ட தமிழக அரசு

Published : Jun 05, 2025, 03:22 PM IST

வைகாசி மாத சுப முகூர்த்த நாட்களில் நிலம் வாங்க விரும்புவோருக்கு பத்திரப்பதிவுத் துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், மக்கள் தங்கள் நிலங்களை எளிதாகப் பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

PREV
13
சொந்தமாக வீடு, நிலம் வாங்க திட்டமிடும் மக்கள்

சொந்தமாக வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்பது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் கனவாக இருக்கும். அந்த வகையில் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் வங்கி லோன் மூலம் வீடு வாங்க திட்டமிடுவார்கள். அப்படி திட்டமிடுபவர்கள் நல்ல நாளில் வாங்க வேண்டும் என்பது அனைவரின் நினைப்பாக இருக்கும். 

ஆனால் அன்றைய தினத்தில் பல நூறு பேர் ஒரே நாளில் பத்திர பதிவு செய்ய வருவதால் ஏழை எளிய மக்களால் விஷேச மற்றும் முகூர்த்த நாளில் நிலங்களை வாங்க முடியாத நிலை நீடிக்கும். இந்த நிலையில் வைகாசி மாதத்தில் முகூர்த்த நாளான நாளை பத்தி பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய அருமையான வாய்ப்பை பத்திர பதிவு துறை அறிவித்துள்ளது.

23
விஷேச நாட்களில் கூடுதல் பத்திர பதிவு

இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 

இதனால் நல்ல நாளில் மக்கள் தங்களது நிலங்களை பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. தற்போது வைகாசி மாதத்தின் மங்களகரமான தினங்களான இன்று (05.06.2025 -06.06.2025) மற்றும் நாளை அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

33
கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு

இதனை ஏற்று வைகாசி மாதத்தின் மங்களகரமான தினங்களான இன்று மற்றும் நாளை ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் ,

அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories