ஏற்கனவே தளபதி விஜய் உடன் அழகிய தமிழ் மகன் என்கின்ற திரைப்படத்தில் நடித்த நடிகை நமீதா, இறுதியாக தமிழில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான மியா என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி திருச்சியில் நடந்த ஒரு விழாவில், அதிமுக கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னணியில் அவர் அக்கட்சியில் இணைந்தார். அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ராதாரவியுடன் இணைந்து அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
தற்பொழுது அவர் தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தளபதி விஜயின் அரசியல் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் வீணாக பல விஷயங்களை அவர் பேசிக்கொண்டே இருக்காமல்,செயலில் எல்லா விஷயத்தை காட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ரயிலில் டன் கணக்கில் மூட்டை மூட்டையாக வரும் வெங்காயம்.! வெளியாகப்போகும் குட் நியூஸ்