Z plus security
தமிழக அரசியல் களம்
தமிழகத்தில் அரைநூற்றாண்டிற்கு மேல் தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி ஆட்சி செய்து வருகிறது. இந்த கட்சிகளுக்கு மாற்றாக பல கட்சிகள் உருவான நிலையில் தற்போது அந்த கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. ஒரு வேளை இந்த திராவிட கட்சிகளிடமே கூட்டணி வைத்துக்கொண்டு ஒரு சில தொகுதிகளை பெற்று சமாதானம் அடைந்து விட்டது.
இந்த நிலையில் தான் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு மிகப்பெரிய தலைவர்கள் இல்லாத நிலையில் எப்படியாவது மக்களின் ஆதரவை பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என களம் இறங்க தயாராகிவிட்டார் நடிகர் விஜய்.
அரசியல் களத்தில் விஜய்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு இதோ வருகிறார். அதோ வருகிறார் என கூறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தனது உடல் நிலை அரசியல் களத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லையெனக்கூறி பின் வாங்கிவிட்டார். ஆனால் விஜய்யோ பிஸியாக படத்தில் நடித்து வரும் நிலையில், ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பாதித்து வரும் போது திடீரென படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.
TVK vijay
சட்டமன்ற தேர்தலே ஒரே இலக்கு
நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை, விக்கிரவாண்டி தேர்தலிலும் ஆதரவு இல்லை என அறிவிப்பு வெளியிட்டார். தங்களது ஒரே இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என உறுதியாக கூறினார். இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அரசியலில் களம் இறங்கப்போவதாகவும் கூறியுள்ளார் விஜய். இந்தநிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எப்படி சந்திக்கலாம், யாரை எல்லாம் கூட்டணிக்கு அழைக்கலாம் என பல கட்ட ஆலோசனைகளை தவெக தலைவரும், நடிகருமான விஜய் ஆலோசித்துள்ளார்.
TVK
திமுக கூட்டணி கட்சியை இழுக்கும் விஜய்
அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணிக்கு அழைக்க ரகசிய பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதே போல கம்யூனிஸ்ட் கட்சியையும் தங்கள் அணிக்கு இழுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக தற்போதே பேச்சுவார்த்தையை ஒரு பக்கம் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தையும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தற்போது வரை ஓகே சிக்னல் கொடுக்கவில்லை. எனவே கால மாற்றத்தால் எந்த எந்த கட்சிகள் அணி மாறுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்