மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் சூரி தனது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்து திரும்பி வரும் பொழுது சூரியை பார்த்த ரசிகர்கள் சூரியை சூழ்ந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து செல்பி எடுத்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சூரி: எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் இன்று எனக்கும் என் தம்பிக்கும் பிறந்தநாள் ராமன் லட்சுமணன் நானும் என் தம்பியும் இரட்டை பிறவிகள் ராமன் என்ற பெயர் சூரியாக மாரியிருக்கு. அம்மன் உணவகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு எல்லாரும் சூரி என்று சொல்வார்கள் அது கிடையாது. அம்மன் உணவகம் வளர்ச்சிக்கு எனது தம்பிகள் அண்ணன்கள் தான் முழு காரணம் அம்மன் உணவகத்தால் தான் எனக்கு பெருமை.