வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாநாடு நடைபெறும் என்றும், ஒரு மாநாடு எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கு திருச்சி மாநாடு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக இருக்கும் என சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு அண்மையில் மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் அதிமுக, திமுக, பாஜக என அனைத்து கட்சிகளின் மூத்த அரசியல் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. விஜய்யின் பேச்சை விமர்சிக்காத தலைவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
25
அங்கிள் அங்கிள் என கத்துவது ஏன்?
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் மாநாட்டில் CM சார் என்று குறிப்பிட்டவரை மதுரை மாநாட்டில் அங்கிள் என குறிப்பிட்டது ஏன்? அணில் ஏன் அங்கிள் அங்கிள் என்று கத்துகிறது? ஜங்கில் ஜங்கில் என்று தானே கத்த வேண்டும்?
35
விஜய் உடன் இருப்பவர்கள் வெற்று பதர்
விஜய்யின் மதுரை மாநாட்டில் கூடிய கூட்டத்தைப் பற்றி பேசுகிறீர்கள். அங்கு கூடிய கூட்டம் ஓட்டாக மாறுமா? அவருடன் இருப்பவர்கள் எல்லாம் வெற்று பதர். ஆனால் என்னுடன் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் நெல்மணிகள். ஒரு நெல்மணியில் இருந்து 1600 நெல்மணிகளை உருவாக்க முடியும். ஆனால் பதர் என்ன செய்தாலும் வெறும் பதர் தான். இது தான் என்னுடன் இருப்பவர்களுக்கும், விஜய்யுடன் இருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய் தற்போது தேர்தல் வரவுள்ளதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக தற்போது யாரிடம் உள்ளது என்று கேள்கி கேட்கிறார். இதே கேள்வியை அவர்கள் நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் பொழுது கேட்டிருக்க வேண்டியது தானே. அப்பொழுது கேள்வி எழுப்பாமல் இப்போது ஏன் கேட்கிறார்?
55
திருச்சியில் இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநாடு
தவெக மாநாட்டில் கூடிய கூட்டம் பற்றி பேசுகிறீர்கள், பிப்ரவரி 7ல் திருச்சியில் மாநாடு நடத்துகிறேன். அப்பொழுது கூடும் கூட்டத்தைப் பாருங்கள். மாநாடு என்றால் எப்படி நடத்த வேண்டும்? எப்படி உரையாற்ற வேண்டும்? எத்தனை லட்சம் பேர் கூடுகிறார்கள் என்று அப்போது பாருங்கள்.