சனி, ஞாயிறு விடுமுறை.! டூர் போறீங்களா.? சொந்த ஊர் பயணமா.? சிறப்பு பேருந்து இயக்கம் - எங்கிருந்து தெரியுமா.?

First Published | Jul 10, 2024, 8:32 AM IST

சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகளுக்காக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. எத்தனை பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. எங்கிருந்து இயக்கப்படவுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. 
 

koyambedu

வார விடுமுறை- சிறப்பு பேருந்து

வார இறுதி நாட்களை முன்னிட்டு ஏராளமான பயணிகள் சொந்த ஊர் மற்றும வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வார்கள் அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக  அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  12/07/2024 (வெள்ளிக்கிழமை) 13/07/2024 (சனிக்கிழமை) 14/07/2024 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்ணையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Koyambedu

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணமலை. திருச்சி.  மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 12/07/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 275 பேருந்துகளும், 13/07/2024 (சனிக்கிழமை) 325 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Latest Videos


tamilnadu bus

திருவண்ணாமலை, வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்து

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை. நாகை. வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 12/07/2024 வெள்ளிக் கிழமை அன்று 65 பேருந்துகளும் 13/07/2024 சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Power Shutdown in Chennai: வேலை இருந்தா சீக்கிரமா முடிச்சுருங்க! சென்னையில் இன்று இந்த ஏரியாக்களில் மின்தடை!

சென்னைக்கு திரும்ப சிறப்பு பேருந்து

மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 12/07/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 15 பேருந்துகளும் 13/07/2024 (சனிக்கிழமை) அன்று 15 பேருந்துகளும் ஆக 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

CRIME : சென்னையில் 6000 ரவுடிகளுக்கு செக்.! பட்டியல் தயார்.! யார் எங்கே இருக்காங்க.? கமிஷனர் அதிரடி
 

முன்பதிவு செய்யுங்கள்

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,010 பயணிகளும் சனிக்கிழமை 2,387 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,756 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 

click me!