நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்.! நடந்தது என்ன.? வெளியான பரபரப்பு தகவல்

Published : Apr 17, 2025, 08:15 AM IST

நாங்குநேரியில் சின்னத்துரை மீண்டும் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்ட நபரால் அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக சின்னத்துரை தெரிவித்துள்ளார். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ளார்.

PREV
14
நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்.! நடந்தது என்ன.? வெளியான பரபரப்பு தகவல்

Mysterious gang attacks Nanguneri student Chinnadurai : நெல்லை நாங்குநேரியில் பகுதியை சேர்ந்த மாணவர் சின்னத்துரையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சக மாணவர்கள் ஜாதி ரீதியாக தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் வரை கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் மாணவன் சின்னத்துரை தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

24
Nanguneri Chinnadurai

மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்

இதனிடையே மாணவன் சின்னத்துரை தாக்கப்பட்டது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சஜன் பராஜ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாங்குநேரி சின்னத்துரை தாக்கப்பட்ட செய்தி கிடைத்ததும் திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் சந்தித்ததாகவும், தற்போது சின்னத்துரை நலமாக இருக்கிறார். தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்ன நடந்தது எனக் கேட்டதற்கு சின்னத்துரை கூறுகையில், "இன்ஸ்டாகிராம் செயலியில் என்னோடு படித்த பழைய நண்பன் என ஒருவன் கூறினான். திருமண பத்திரிகை வழங்க வேண்டும் அதனால் இங்கே வா என்று அழைத்தான். 

34
Chinnadurai attack

நாங்குநேரி சம்பவம் நடந்தது என்ன.?

இதனையடுத்து நான் வசந்தா நகர் சென்றேன். அப்போது ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவன் யார் என்று தெரியாததால் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு கிளம்ப முற்பட்டேன். அப் போது மேலும் அங்கே மறைந்திருந்த 3 பேர் என்னை சூழ்ந்து கொண்டு முள்கம்பால் அடித்தனர்.

கையில் அவர்கள் இரண்டு அரிவாளும் வைத்திருந்தனர். இதனையடுத்து தப்பிய ஓடிய நான் பக்கத்தில் இருந்த வீட்டுக்கு சென்று கதவைத் தட்டி உதவி கேட்டேன். அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, போலீஸ் வந்து 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாக சின்னத்துரை தெரிவித்ததாக சஜன் பராஜ் தெரிவித்துள்ளார்.

44
Nanguneri attack

வீடு திருப்பிய சின்னத்துரை

இதனிடையே முள்கம்பால் அடித்ததில் ஏற்பட்ட காயத்தில் சின்னத்துரைக்கு கையில் ஒரு தையல் போடப்பட்டிருக்கிறது. காலில் லேசான காயங்கள் இருக்கிறது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்று விட்டார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சஜன் பராஜ் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

Read more Photos on
click me!

Recommended Stories