ஒரே மாதத்தில் இத்தனை லட்சம் பேரா.? சாதனை மேல் சாதனை படைக்கும் சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 86,99,344 பயணிகள் மெட்ரோவில் பயணித்துள்ளனர். பயண அட்டைகள், டோக்கன்கள், QR குறியீடுகள் மற்றும் சென்னை அட்டைகள் மூலம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

87 lakh people have traveled in Chennai metro train in January KAK
Chennai Metroஒரே மாதத்தில் இத்தனை லட்சம் பேரா.? சாதனை மேல் சாதனை படைக்கும் சென்னை மெட்ரோ ரயில்

சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல பல மணி நேரம் செலவிடும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வரும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மக்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட இடத்திற்கு விரைவாக செல்ல மெட்ரோ ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது.  சென்னை மெட்ரோ இரயிலில் நாள் ஒன்றுக்கு சுமார் 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.  2024-ம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ இரயிலில் பயணித்துள்ளார்கள்.

87 lakh people have traveled in Chennai metro train in January KAK
ஜனவரியில் மெட்ரோ ரயில் பயணம்

இந்த நிலையில்  கடந்த ஜனவரி மாதம் புதிய உச்சத்தை சென்னை மெட்ரோ ரயில் தொட்டுள்ளது. இதன் படி 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 10.01.2025 அன்று 3.60,997 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 
 


மெட்ரோ ரயில் பயணம்

அந்த வகையில் 2025, ஜனவரி மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 23,78,989 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,800 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 7,219 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37.80,386 பயணிகள், (Online QR 1,59,162; Paper QR 18,94,376; Static QR 2,64,321; Whatsapp 5,89,305; Paytm 4,20,389; PhonePe 3,28,755; ONDC 1,24,078), சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 25,30,950 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மெட்ரோ ரயில் 20% தள்ளுபடி

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Whatsapp, Paytm App. PhonePe போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!