ரொம்ப ரொம்ப கம்மி வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன்.! ஆவணங்களை கொடுங்க அள்ளிட்டு போங்க- அரசு அறிவிப்பு

தமிழக அரசு சிறுபான்மையின மக்களின் முன்னேற்றத்திற்காக TAMCO மூலம் கடன் உதவி வழங்குகிறது. கைவினை கலைஞர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. தகுதியான நபர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

For artisans loans up to Rs 10 lakh will be provided at low interest KAK
ரொம்ப ரொம்ப கம்மி வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன்

தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மக்கள் முன்னேற்றத்திற்காக சொந்த தொழில் செய்யவும், கல்விக்காகவும் பல்வேறு துறையின் கீழ் கடன் உதவி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில்  பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் உதவி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

For artisans loans up to Rs 10 lakh will be provided at low interest KAK
கைவினை கலைஞர் கடன் திட்டம்

அதன் படி தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(TAMCO)விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம் மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் கைவினை கலைஞர்களின் மூலதன தேவையைப் பூர்த்தி செய்வதற்காக குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்குதவற்கான இக்கடன் வழங்கப்படுகிறது.
 


தகுதிகள், ஆவணங்கள் என்ன.?

தகுதிகள் :

1. விண்ணப்பதாரர் மதவழி சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவர்கள், பார்சிகள், ஜெயினர்கள் ஆகியோர்களில் ஒருவராக இருத்தல் வேண்டும்.

2. விண்ணப்பதார் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

3. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் வழங்கப்படும்.

அளிக்கப்படவேண்டிய ஆவணங்கள் :

விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்கண்ட ஆவணங்களின் நகலுடன் அந்தந்த மாவட்டபிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலஅலுவலர்கள்/மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் / கூட்டுறவு வங்கிகளில் சமர்பிக்க வேண்டும்.

1. சிறுபான்மையினர் மதச்சான்றிதழ். 2. சாதி சான்றிதழ். 3. வருமான சான்றிதழ். 4. உணவுபங்கீடு அட்டை (அ) இருப்பிட சான்றிதழ். 5. ஆதார் அட்டை. 6. திட்ட அறிக்கை.
7. வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள்.

கடன் பெற விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்கும் முறை:

கடன் விண்ணப்ப படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் கிடைக்கும்.

1. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்/மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம்.

2. மண்டல கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.

3. மாவட்ட / மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லதுதொடக்கவேளாண்மைகூட்டுறவு வங்கி.
 

கடன் தொகை, வட்டி என்ன.?

திட்டம்-1

ஆண்டு வருமானம் கிராமப் புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.3,00,000/-க்கு மிகாது இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில் பெண்களுக்கு 4 % வட்டியிலும், ஆண்களுக்க 5 % வட்டியிலும் கடன் உதவி வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலக்கெடு என்ன.?

திட்டம்-2

திட்டம் 1 இன் கீழ் நன்மை பெற முடியாத நபர்கள் மற்றும் ரூ.8,00,000/ வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள் (கிராமபுறம் மற்றும் நகர்புறங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண்களுக்கு 5% வட்டியும், ஆண்களுக்கு 6% வட்டியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கடனை அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!