தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறை தொடர்ந்து வசூலில் சக்கைபோட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு அதிக வருமானம் ஈட்டித் தருகிறது. இந்நிலையில், பத்திரப்பதிவு அலுவலகங்கள் தொடர்பாக முக்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
பத்திரப்பதிவு துறை வசூல் ராஜா ஆகிறதா? பறந்தது முக்கியமான சுற்றறிக்கை; முழு விவரம்!
தமிழ்நாட்டில் சொத்துகளை வாங்குபவர்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஒரு சொத்தினை பத்திரப்பதிவு செய்வதற்கு சந்தை மதிப்பு மற்றும் பதிவு கட்டணம் என மொத்தம் 9% வசூலிக்கப்படுகிறது. இதில் 7 சதவீதம் அரசின் கஜானாவிற்கு வந்து விடுவதால் தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதில் பத்திரப்பதிவுத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழ்நாட்டில் சுமார் 582 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு நாளுக்கு நாள் பத்திரபப்திவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசுக்கு வருமானம் கொட்டுகிறது. கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் 25 லட்சம் பேர் பத்திர பதிவு செய்துள்ளனர். இந்த பத்திர பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ.15,582 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக பத்திரப்பதிவு துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
24
பத்திரப்பதிவு அலுவலகங்கள்
முதலில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வந்தன. கடந்த 2023ம் ஆண்டு முதல் சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு மேற்கொள்ளலாம் என அரசு அறிவித்தது. இதேபோல் முகூர்த்த நாட்களிலும் அதிக அளவு பத்திரப்பதிவு நடைபெறும் என்பதால் அந்த நாட்களில் அதிக அளவிலான டோக்கன் வழங்கபப்ட்டு வந்தது.
இந்நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமையும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், '2024-25ம் நிதியாண்டில் கடந்த 05.12.2024 அன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.238.15/- கோடி வருவாய் பதிவுத்துறையில் ஈட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 31.1.2025 அன்று 23,061 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, இதே நிதியாண்டில் இரண்டாவது முறையாக அரசுக்கு ரூ.231.51/- கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
34
பத்திரப்பதிவு துறை வருமானம்
இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இரண்டாவது முறையாக இதே நிதியாண்டில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது. மேலும், பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசு வணிகவரி மற்றும் பதிவுத்துறை கடித (நிலை) எண்.124/ஜே2/2024 நாள் 21.10.2024ன் வழியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
44
தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை
எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப்பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மேற்படி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் பணிசெய்யும் பதிவுத்துறை பணியாளர்களுக்கு மாற்று விடுப்பு வழங்கப்படும் என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.