* பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் கடிகராம் அமைக்கப்பட்டுள்ளது.
* பயணிகளின் சுமை பெட்டி மற்றும் சரக்கு பார்சலுக்காகவும் போதிய இட வசதியுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
* அரசு நிர்ணயம் செய்த அளவுகளின் அடிப்படையில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் புதிய பேருந்துகளின் Engine என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் செயல் திறனுக்காக நவீன எலக்ட்ரானிக் மேக்னடிக் ரிடார்டர் (EMR) நிறுவப்பட்டுள்ளது.
* இன்ஜின் தீயை முன் கூட்டியே திறம்பட அனுமானித்து, தீ கட்டுபாட்டு அமைப்பு (FDSS) கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தீவுத்திடலில் இன்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் 37.98 கோடி ரூபாய் மதிப்பிலான இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 61 அதிநவீன புதிய பேருந்துகளின் இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.