தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அரசே எடுத்து நடத்தி வருகிறது. 2016ம் ஆண்டு மொத்தம் 6,828 டாஸ்மாக் கடைகள் இருந்தன. 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது மதுவிலக்கு என்ற பொதுமக்களின் கோஷம் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் அதிர வைத்தது. அதன்படி, திமுக தனது தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கூறி வந்தது. அதேபோல், அதிமுக படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. இறுதியாக ஆட்சியைத் தக்கவைத்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியின் படி 500 டாஸ்மாக் கடைகளையும், அவரது மறைவுக்கு பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி 2017ம் ஆண்டு 500 கடைகளைகள் என மொத்தம் 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டன.