Vijay Set Hit Back: 5 வருடம் 5 முதலமைச்சர்.! சீமான் உள்ளிட்டோரை ஸ்கெட்ச் போட்டு தூக்க திட்டம் ரெடி.! அடித்து ஆட தொடங்கும் விஜய்.!

Published : Feb 10, 2026, 08:10 PM IST

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் மூலம் அரசியலில் அதிரடியாக இறங்கியுள்ளார். 5 வருடம் 5 முதலமைச்சர்கள் என்ற அதிகாரப் பகிர்வு திட்டத்தின் மூலம் திமுக, அதிமுகவிற்கு சவால் விடுவதுடன், சீமான் போன்றோரின் வாக்கு வங்கியை உடைக்கவும் வியூகம் வகுத்துள்ளார். 

PREV
110
அதிகாரப் பகிர்வு எனும் புதிய அஸ்திரம்

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் முன்வைக்காத ஒரு வியூகத்தை விஜய் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதுதான் கூட்டு ஆட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு. 

மக்களாட்சியில் மாற்றம்

 ஒரே நபர் ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராக இருப்பதை விட, கூட்டணி கட்சிகளுக்கும் தலா ஒரு வாய்ப்பு அல்லது குறிப்பிட்ட சமூகப் பிரதிநிதிகளுக்கு முன்னுரிமை என்ற ரீதியில் இந்த பேச்சுக்கள் உலா வருகின்றன.

திமுக - அதிமுகவிற்கு செக்

காலங்காலமாக ஒரு குடும்பத்தைச் சுற்றியோ அல்லது ஒரு தனி நபரைச் சுற்றியோ சுழலும் அதிகார மையத்தை உடைப்பதே இதன் நோக்கம் எனப் பார்க்கப்படுகிறது.

210
சீமான் உள்ளிட்டோருக்கு "ஸ்கெட்ச்"

விஜய்யின் அரசியல் கணக்கு தன்னுடைய தம்பிகள் என்று ஒரு பக்கம் அரவணைத்தாலும், தேர்தல் என்று வரும்போது வாக்குகளைப் பிரிப்பதில் சீமான் ஒரு முக்கிய காரணியாக இருப்பார் என்பதை விஜய் உணர்ந்துள்ளார்.

வாக்கு வங்கி வேட்டை

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் வாக்குகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தமிழ் தேசிய வாக்குகளைத் தன் பக்கம் இழுக்க விஜய் 'ஸ்கெட்ச்' போட்டு வருகிறார்.

கூட்டணி வியூகம்

சீமான் தனித்துப் போட்டி என்பதில் உறுதியாக இருப்பதால், அவரைச் சுற்றியுள்ள சிறு கட்சிகள் மற்றும் அதிருப்தியாளர்களைத் தமிழக வெற்றிக் கழகம் நோக்கி ஈர்க்கத் திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் சீமானுக்கும் முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற வகையில் 5 வருடம் 5 முதலமைச்சர்கள் என்ற திட்டத்தை விஜய் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் கூட்டணி கட்சியை நேர்ந்த 5 பேர் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு ஏற்படும் என்பதால் திமுக, அதிகமுகவிற்கு தலை சுற்றும் அளவுக்கு நெருக்கடி ஏற்படும்.

முன்னாள் நண்பர்கள் - இந்நாள் எதிரிகள்

ஒரு காலத்தில் ஆதரவு அளித்தவர்களே இப்போது விமர்சிப்பதால், அவர்களின் விமர்சனங்களுக்குப் பதில் சொல்லாமல், செயலால் பதிலடி கொடுக்க விஜய் முடிவெடுத்துள்ளார்.

310
அடித்து ஆடத் தொடங்கும் விஜய்: இனி எல்லாமே அதிரடிதான்!

சினிமாவில் 'ஸ்லோ மோஷனில்' என்ட்ரி கொடுத்தாலும், அரசியலில் 'ஃபாஸ்ட் டிராக்' மோடுக்கு மாறிவிட்டார் விஜய். விக்கிரவாண்டி மாநாட்டிற்குப் பிறகு தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியை ஓட்டாக மாற்ற மாவட்ட வாரியாக ரகசிய சர்வேக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.ஆளுங்கட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டி, அதே சமயம் மக்கள் மனதை வெல்லும் வகையிலான நலத்திட்டங்களை இப்போதே முன்னெடுத்து வருகிறார்.விஜய்யின் ஐடி விங் மற்ற கட்சிகளின் விமர்சனங்களைத் தவிடு பொடியாக்கி, விஜய்யின் 'விஷன் 2026' திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கத் தயாராகிவிட்டது. விஜய்யின் இந்த அதிரடி மாற்றங்கள் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய 'பவர் ஷிஃப்ட்' ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், 2026 தேர்தல் களம் நிஜப் போர்க்களமாக மாறப்போவது உறுதி.

410
5 வருடம் 5 முதலமைச்சர் என்பது ஒரு சோதனை முயற்சி

5 வருடம் 5 முதலமைச்சர் என்பது ஒரு சோதனை முயற்சியாக இருந்தாலும், அது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை திட்டமாக வெளியிடும் பட்சத்தில்  நாம் தமிழர்,  விடுதலை சிறுத்தைகள்,  கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இடம் மாறும் சூழல் ஏற்படும் என கூறப்படுகிறது. சீமான் போன்றவர்களைக் கையாள்வதில் அவர் காட்டும் நிதானமும், களப்பணியில் காட்டும் வேகமும் விஜய்யை ஒரு வலிமையான தலைவராகச் சித்திரிக்கிறது. இந்த 'ஸ்கெட்ச்' வெற்றிகரமாக அமைந்தால், 2026-ல் தமிழக அரசியல் ஒரு புதிய அத்தியாயத்தைக் காணும்.

510
களத்தில் இறங்கிய "விசில்" சின்னம்

சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் 'விசில்' சின்னத்தைப் பெற்றுள்ள தவெக, தனது பிரச்சார வேகத்தை இருமடங்காக்கியுள்ளது.

234 தொகுதிகளிலும் வழக்கறிஞர் அணி

தேர்தல் களத்தில் வரக்கூடிய சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள, ஒவ்வொரு தொகுதிக்கும் பிரத்யேக வழக்கறிஞர் குழுவை விஜய் நியமித்துள்ளார்.

5 மண்டலக் கொள்கை

தமிழகத்தை 5 மண்டலங்களாகப் பிரித்து, அங்குள்ள மக்களின் கோரிக்கைகளைத் தொகுத்து "மக்கள் தேர்தல் அறிக்கை" தயாரிக்க விஜய் உத்தரவிட்டுள்ளார்.

ஊழலுக்கு எதிரான ஆக்ரோஷம்

"கடந்த கால ஆட்சியாளர்களும் சரி, நிகழ்கால ஆட்சியாளர்களும் சரி, ஊழலற்ற ஆட்சியைத் தரவில்லை" என்று திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்துத் தாக்கத் தொடங்கிவிட்டார்.

610
தமிழக அரசியலின் புதிய விடியலா?

சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த தகவல் உண்மையாகும்  பட்சத்தில் இது வெற்றி கூட்டணியாக மாறும் என அரசியல் நோக்கர்கள்் தெரிவித்துள்ளனர். தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் விளிம்பில் நிற்கிறது. "5 வருடம் 5 முதலமைச்சர்" என்ற விஜய்யின் புதிய பார்முலா, அதிகாரத்திற்காகத் துடிக்கும் மற்ற கட்சிகளுக்கு இடையே, அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கும் ஒரு புரட்சிகரமான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. 

710
நுணுக்கமான அரசியல்வாதியா?

வெறும் சினிமாப் பிம்பமாக மட்டும் இல்லாமல், சீமான் போன்ற தீவிர அரசியல்வாதிகளை எதிர்கொள்ள விஜய் வகுத்துள்ள நுணுக்கமான 'ஸ்கெட்ச்', அவர் ஒரு பழுத்த அரசியல்வாதியாகப் பரிணமிப்பதைக் காட்டுகிறது.

810
சவால்களும் வாய்ப்புகளும்

திராவிடக் கட்சிகளின் பலமான கட்டமைப்பு மற்றும் பணபலத்தை எதிர்த்து, இளைஞர் சக்தியையும் அடித்து ஆடும் வேகத்தையும் மட்டுமே நம்பி விஜய் இறங்கியுள்ளார். அவரது இந்த அதிரடி ஆட்டம் 2026 தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 

910
மக்களின் தீர்ப்பு

அரசியலில் "புதிய ரத்தம்" பாய்ச்சப்பட வேண்டும் என நினைக்கும் வாக்காளர்களுக்கு விஜய் ஒரு நம்பிக்கையாகத் தெரிகிறார் விஜய் என்கின்றனர் அவரது ரசிக பெருமக்கள். எனினும், தனது கொள்கைகளைச் சிதறாமல் மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், எதிர் தரப்பு வைக்கும் விமர்சனங்களைச் சமாளிப்பதிலும்தான் விஜய்யின் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது. 

1010
ரசிகர்களின் விருப்பம்

சுருக்கமாகச் சொன்னால் விஜய்யின் அரசியல் வருகை என்பது வெறும் திரைக்கதை அல்ல, அது தமிழக அரசியலின் தலையெழுத்தையே மாற்றப்போகும் ஒரு நிஜக் கதை என்கிறன்றனர் அவரது ரசிகர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories