ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்துள்ள சாமந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி கவிதா(37). இருவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கவிதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.