Published : Apr 09, 2025, 04:21 PM ISTUpdated : Apr 09, 2025, 05:04 PM IST
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த்திருவிழா ஏப்ரல் 15-ம் தேதி நடைபெறுகிறது. அன்று திருச்சி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
25
School College Holiday
ஏப்ரல் 15-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 15-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருச்சி ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் சித்திரைத் தேர்த் திருவிழா நடைபெறும் ஏப்ரல் 15ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மே 03ம் தேதி சனிக்கிழமை அன்று அரசு வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
45
Bank No Holiday
வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது
அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act-1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செவ்வாய் கிழமை விடுமுறை சேர்த்தால் திருச்சி மாவட்டத்திற்க மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வருகிறது. அதாவது ஏப்ரல் 12, 13 சனி, ஞாயிறு வார விடுமுறையும், ஏப்ரல் 14ம் தேதி திங்கள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டும், ஏப்ரல் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.