நாதகவின் மண்டல செயலாளர் மட்டுமல்ல வேட்பாளர்களையும் தட்டித்தூக்கிய திமுக.! கதறும் சீமான்

First Published | Jan 24, 2025, 12:22 PM IST

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சு அவருக்கு எதிராகவே திருப்பியுள்ளது. கட்சி நிர்வாகிகள் சீமான் கட்சி விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், அவர்களின் பேச்சைக் கேட்பதில்லையெனவும் விமர்சித்துள்ளனர். இதனால் பல நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.

seeman

சீமானும் அரசியலும்

தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய பலம் பொருந்திய கட்சிக்கு எதிராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் தனித்து களம் கண்ட கட்சி, நாம் தமிழர் கட்சியாகும். அந்த வகையில் சீமானின் பேச்சுக்கு ஏராளமான இளைஞர்கள் அவரது பின்னால் சென்றனர். சீமானின் ஆவேச பேச்சுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் தேர்தல் களத்தில் தனித்து களம் கண்டு 10 சதவிகித வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி,  இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சு அவருக்கு எதிராகவே திருப்பியுள்ளது. 

சீமானின் சர்ச்சை பேச்சு

அந்த வகையில் கடந்த சில நாட்களாக சீமானுக்கு எதிராக அக்கட்சி நிர்வாகிகளே போர்க்கொடி தூக்கியுள்ளனர். சீமான் கட்சி நிர்வாகிகளின் பேச்சு கேட்பதில்லையெனவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும் விமர்சித்தனர். இதன் காரணமாக பல மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்து கட்சியில் விலகி சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இந்த நிலையில்  அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை, மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லையென சென்னையில் பல்வேறு இடங்களில் பெயர் குறிப்பிடாமல் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.


seeman stalin

திமுகவில் இணைந்த தம்பிகள்

இதனையடுத்து தான் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இன்று இணைந்துள்ளனர்.  அந்த வகையில் மண்டல செயலாளர்  1, மாவட்ட செயலாளர்கள் 8 பேர், ஒன்றிய செயலாளர்கள்  5 பேர்,  சார்பு அணி நிர்வாகிகள் 9 பேர், தொகுதி செயலாளர்கள்  6 பேர், எம் பி வேட்பாளர்கள் 3 பேர், எம் எல் ஏ வேட்பாளர்கள்  6 பேர் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்டவர்கள் திமுக தலைவரும், முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

விமர்சித்த ஸ்டாலின்

அவர்களை வரவேற்று பேசிய ஸ்டாலின், பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஒரு இயக்கத்தில் பணியாற்றி வந்த நீங்கள் அந்த இயக்கத்தின் தலைமை முறையாக இல்லை, அந்த தலைமையை நம்பி போவது நமக்கு மட்டுமல்ல தாய் நாட்டுக்கு சரியாக இருக்காது என்று முடிவெடுத்து நாம் யாரிடத்தில் போய் இருக்க வேண்டும், எப்படி பணியாற்ற வேண்டும் என்று எண்ணி சிறப்பான முடிவெடுத்து இன்றைக்கு திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளீர்கள்

பிதற்றிக்கொண்டுள்ளார்கள்

49 இல் தொடங்கி 57 இல் தான் தேர்தல் களத்திற்கு வந்தோம். ஆனால் இன்றைக்கு சில கட்சிகளை பார்க்கிறோம் கட்சி தொடங்கியவுடன் ஆட்சிக்கு வருகிறோம் ஆட்சிக்கு வருகிறோம் என்று சொல்லக்கூடிய நிலை உள்ளது. நாங்கள் தான் அடுத்த ஆட்சி நாங்கள் தான் அடுத்த முதல்வர் என்று சில அனாதையாக சுற்றிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் பிதற்றி கொண்டு இருக்கிறார்கள் அவர்களெல்லாம் யார் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காட்ட நான் தயாராக இல்லை.. அவர்கள் பெயரைச் சொல்லி இந்த மேடைக்கு அந்த அங்கீகாரத்தை நான் குறைக்க விரும்பவில்லையென முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
 

Latest Videos

click me!