கொட்டிக்கிடக்கும் தக்காளி.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? கூடை, கூடையாக அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்

First Published | Jan 24, 2025, 7:52 AM IST

டிசம்பர் மாத இறுதியில் இருந்து தக்காளி மற்றும் வெங்காயத்தின் உற்பத்தி அதிகரித்து, விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு அதிகளவு காய்கறிகளின் வரத்தின் காரணமாக விலையும் சரிவை சந்தித்துள்ளது. 

tomato onion

தங்கத்தை போல் உயர்ந்த தக்காளி விலை

சமையல் என்றாலே காய்கறிகள் தான் முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில் நாள் தோறும் காய்கறின் விலையானது ஏறி இறங்கி வருகிறது. குறிப்பாக தக்காளி வெங்காயத்தின் விலைதான் வரலாறு காணாத வகையில் கடந்த மாதம் துவக்கத்தில் ஒரு கிலோ 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் மாத பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவானது.

எனவே கிலோ கணக்கில் தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி சென்ற மக்கள் குறைவான அளவே வாங்கும் நிலை உருவானது. மேலும் வீட்டில் சமையலில் தக்காளி மற்றும் வெங்காயம் சார்ந்த உணவு வகைகளை தவிர்க்கவும். குறைக்கவும் செய்தனர்.
 

tomato price

வெங்காயம் ஏற்றுமதி

மேலும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது ஒரு பக்கம் விலை உயர்விற்கு காரணமாக கூறப்பட்டாலும், மழை பாதிப்பால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டதும் முக்கிய பங்கு வகித்தது. இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் தக்காளி மற்றும் வெங்காயத்தை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தது.

இதற்காக டன் கணக்கில் வெங்காயத்தை நாசிக்கில் இருந்து சென்னைக்கு ரயில்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இருந்த போதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைவான விலையில் தக்காளி மற்றும் வெங்காயம் கிடைக்காத நிலை உருவானது.
 


Onion Price Today

குறைய தொடங்கிய விலை

இந்தநிலையில் தான் டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து தக்காளி மற்றும் வெங்காயத்தின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியதால் வரத்தும் அதிகரித்தது. இதனால் வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாயில் இருந்து 25 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போல தக்காளியும் அதிகளவும் விளைச்சல் காரணமாக ஒரு கிலோ 10 முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மக்கள் தக்காளி மற்றும் வெங்காயத்தை அதிகளவு வாங்கி செல்கின்றனர். 

vegetable price

பச்சை காய்கறிகளின் விலை

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பச்சை காய்கறிகளின் விலையானது குறைந்துள்ளது. உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Vegetables Price Koyembedu

கேரட் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 15 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

tomato price today

தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 முதல் 90 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது 
 

Latest Videos

click me!