பெருபான்மைக்கு தேவையான 118 இடங்களை பெற முடியாத நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், இந்திய முஸ்லிம் லீக் ஆதரவை பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. இரண்டு பிரிவாக உள்ள அதிமுகவில் 25 எம்எல்ஏக்களை கொண்ட சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினர் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். மற்றொரு தரப்பான இபிஎஸ் தரப்பு விஜய்க்கு எதிராக 22 பேர் வாக்களித்தனர். அரசுக்கு ஆதரவாக 144 பேரும், எதிராக 22 பேரும் வாக்களித்தனர். 5 பேர் நடுநிலை வகித்தனர். இதில் திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.