Chennai shawarma food poisoning நவீன காலத்திற்கு ஏற்ப உணவுவகைகளும் நாளுக்கு நாள் புதிய. புதிய பெயரில் மக்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் பிரைடு ரைஸ் முதல் தந்தூர் சிக்கன் என பல வித உணவுகள் தெருவிற்கு தெரு கிடைகிறது. அந்த வகையில் சவர்மா சாப்பிட்ட பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
shawarma
மருத்துவமனையில் அடுத்தடுத்து அனுமதி
சென்னை திருவல்லிக்கேணி அண்ணா சாலை பகுதியில் பிலால் பிரியாணி என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது, இங்கு சிக்கன் மற்றும் பீஃப் உள்ளிட்டவைகளில் தயாரிக்கப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 30ஆம் தேதி இந்தக் கடையில் உணவருத்திய பலர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்சாரி(37), ஃபயாஸ் கான் (23 ),முகமது தசிர்( 21 )கல்லூரி மாணவர, மற்றும் செய்யது அலி மற்றும் அவர்கள் நண்பர்கள் 5 நபர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரியாணி, ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு
இதேபோல் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் விக்னேஷ், ஸ்டீபன் உள்ளிட்ட 6 பேர் கடந்த 30 ஆம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுள்ளனர் மறுநாள் காலை அனைவருக்கும் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகவே சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு காலரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Shawarma
காவல்நிலையத்தில் புகார்
இதேபோல சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த, தேனாம்பேட்டை கல்லூரியில் படிக்கும் சகோதரிகள் இருவர், பெற்றோர் உறவினர்களுடன் சென்று 30ஆம் தேதி மவுண்ட் ரோட்டில் உள்ள பிரபல ஹோட்டலில் உணவு அருந்தியுள்ளனர். சில மணி நேரங்களிலேயே உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரபல ஓட்டலுக்கு சீல்
இப்படி 20க்கும் மேற்பட்டோர் கடந்த 30 ஆம் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள பிலால் உணவகத்தில் சவர்மா சாப்பிட்டு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட புகார் அளித்துள்ளனர் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி உணவகத்தில் உணவு உண்கொண்ட நபர்கள் உடல் நலம் பாதிக்க பட்டதாக வந்த புகாரை தொடந்து உணவகத்திற்கு சீல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது.