Property registration fee concession in the name of women பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 10 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் மற்றும் விவசாய நிலங்கள் உட்பட அனைத்து அசையா சொத்துக்களுக்கும், பெண்கள் பெயரில் பதிவு செய்யும் போது 01.04.2025 முதல் பதிவு கட்டணம் 1%- குறைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும், யாருக்கெல்லாம் இல்லையென வழிகாட்டு நெறிமுறைகளை பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பத்திரப்பதிவு அலுவலகம் வழிகாட்டு நெறிமுறை
அதன் படி இந்த சலுகை மகளிர் பெயரில் சொத்துகள் வாங்கும் விற்பனை ஆவணங்களுக்கு மட்டுமே என்பதால், இந்த சலுகை, சொத்தை வாங்குபவர் ஒரு பெண்ணாக இருந்தாலோ அல்லது அது பெண்கள் பெயரில் கூட்டாக வாங்கப்பட்டாலோ, சொத்தினை வாங்குபவர்கள் அனைவரும் பெண்களாக இருந்தால் மட்டுமே பொருந்தும்.
சலுகை பொருந்தும் இனங்கள்
ஒரு சொத்தினை குடும்ப நபர்களுடன் குடும்ப நபர்கள் அல்லாதவர்கள் சேர்ந்து அதில் பெண்கள் பெயரில் மட்டுமே சேர்ந்து வாங்கினால் இந்த சலுகை பொருந்தும்.
ஒரு சொத்தினை குடும்ப நபர்கள் சேர்ந்து அதில் பெண்கள் பெயரில் மட்டுமே சேர்ந்து வாங்கினால் இந்த சலுகை பொருந்தும்.
சலுகை பொருந்தாது இனங்கள்
ஒரு சொத்தினை கூட்டாக கணவன் மனைவி சேர்ந்து வாங்கினால் இந்த சலுகை பொருந்தாது.
ஒரு சொத்தினை குடும்ப நபர்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து வாங்கினாலும் இந்த சலுகை பொருந்தாது.
ஒரு சொத்தினை குடும்பம் அல்லாத நபர்கள் சேர்ந்து அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து வாங்கினாலும் இந்த சலுகை பொருந்தாது.
land registration
தள்ளுபடி யாருக்கெல்லாம் இல்லை
ஒரு சொத்தினை குடும்ப நபர்களுடன் குடும்ப நபர்கள் அல்லாதவர்கள் சேர்ந்து அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து வாங்கினாலும் இந்த சலுகை பொருந்தாது.
ஆவணங்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட பதிவு கட்டணம் திரும்பப் பெற முடியாது
பதிவு ஆவணம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் நிலவும் சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பின்படி சொத்தின் மதிப்பு 10 லட்சம் வரை மட்டுமே இருக்க வேண்டும். மேலும் இந்தச் சலுகையைப் பெறுவதற்காக ஒரு சொத்தை வேண்டுமென்றே பல பத்திகளாகப் பிரிக்கக்கூடாது.
பெண்கள் பெயரில் சொத்து
ஒரு 2400 சதுரடி காலிமனையின் சந்தை வழிகாட்டி மதிப்பின்படி ரூ.12,00,000/- வருகிறது. இந்த காலிமனையினை இரண்டு 1200 சதுரடி அல்லது நான்கு 600 சதுரடி பிரித்து ஆவணங்கள் வேறு வேறு பெண்கள் (குடும்ப நபர்கள் (அ) குடும்ப நபர்கள் இல்லாமால்) பெயரில் வாங்க ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் இந்த சலுகை பொருந்தும்.
ஒரு 2400 சதுரடி காலிமனையின் சந்தை வழிகாட்டி மதிப்பின்படி ரூ.12,00,000/- வருகிறது. இந்த காலிமனையினை இரண்டு 1200 சதுரடி அல்லது நான்கு 600 சதுரடி பிரியாடடு ஆவணங்களாக வேறு வேறு பெண்கள் (குடும்ப நபர்கள் (அ) குடும்ப நபர்கள் இல்லாமால்) பெயரில் வாங்க ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் இந்த சலுகை பொருந்தும்.
Register Office
பெண் பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு
ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் முதல் கிரையம் ஆவணங்களுக்கு கூட்டு வழிகாட்டி மதிப்பு மற்றும் இரண்டாவது கிரையம் ஆவணங்களுக்கு சந்தை வழிகாட்டி மதிப்புடன் பொதுபணித்துறை கட்டிட மதிப்பு சேர்த்து (அடுக்குமாடி வீடு மற்றும் பரிபடாத பாக மனைசேர்ந்து) ரூ10,00,000/- வருகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே பெண் பெயரில் எத்தனை அடுக்குமாடி வீடுகள் தனித்தனியாக வாங்கினாலும் இந்த சலுகை பொருந்தும்.
ஒரு மனைப்பிரிவில் இரண்டு அல்லது மூன்று மனைகளை மனைகள் அருகருகே மற்றும் அருகே இல்லாமாலும் தனித்தனி ஆவணங்கள் மூலமாக வாங்கினால் ஒவ்வொரு ஆவணத்திற்கும் சந்தை வழிகாட்டி மதிப்பு ரூ.10,00,000/- க்குள் வரும் நிலையில் ஒரே பெண் பெயரில் வாங்க பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டாலும் இந்த சலுகை பொருந்தும்.
சலுகை பொருந்தாது இனங்கள்
ஒரு 2400 சதுரடி காயிமனையின் சந்தை வழிகாட்டி மதிப்பின்படி ரூ.12,00,000/- வருகிறது என்றால் இந்த சலுவை பெறுவதற்காக இரண்டு 1200 சதுரடி அல்லது நான்கு 600 சதுரடியாக பிரித்து ஆவணங்கள் ஒரே பெண் பெயரில் வாங்க ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டால் இந்த சலுகை பொருந்தாது.
ஒரு 2400 சதுரடி காலிமனையின் சந்தை வழிகாட்டி மதிப்பின்படி ரூ.12,00,000/- வருகிறது. இந்த காலிமனையினை இரண்டு 1200 சதுரடி அல்லது நான்கு 600 சதுரடி பிரிபாடத ஆவணங்களாக ஒரே பெண் பெயரில் வாங்க ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டால் இந்த சலுகை பொருந்தாது.
சொத்தின் மதிப்பு 10 லட்சத்திற்கு மேல் இருந்தால், இந்தச் சலுகை பொருந்தாது. சொத்துப் பதிவுக்குப் பிறகு கட்டிட ஆய்வு தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மற்றும் களஆய்வுக்குப் பிறகு. சொத்து மதிப்பு ரூ.10 லட்சத்திற்கு மேல் மதிப்பிடப்பட்டால், இந்தச் சலுகை பொருந்தாது என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.