10ம் வகுப்பு மாணவர்களே ரெடியா! எதிர்பார்த்து காத்திருந்த முடிவுகள் இன்று வெளியாகிறது!

Published : Aug 26, 2025, 10:09 AM IST

தமிழ்நாட்டில் ஜூலை மாதம் நடைபெற்ற 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

PREV
15

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும், 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர். இதனையடுத்து மே 16ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

25

இதில் மாணவிகள் 4,17, 183 பேரும், மாணவர்கள் 4,00,078 தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 93.80 சதவீதம் மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெறறுள்ளனர். மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 4.14% கூடுதலாக தேர்ச்சி பெற்றனர்.

35

இந்த தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள், முடிவுகள் வெளியான மறுநாளே துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதேபோல், குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் தங்களது மதிப்பெண்களில் சந்தேகம் உள்ள மாணவர்களும் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முடிவுகள் இன்று வெளியாகிறது.

45

இதுதொடர்பாக அரசு தேர்​வு​கள் இயக்​குநர் சசிகலா நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த ஜூலை மாதம் நடந்த 10-ம் வகுப்பு துணைத் தேர்வை எழுதி மறுகூட்​டல் மற்​றும் மறும​திப்​பீடு கோரி மாணவர்​கள் விண்​ணப்​பித்​திருந்​தனர். அவர்​களில் மதிப்​பெண் மாற்​றம் உள்​ளவர்​களின் பதிவெண்​கள் அடங்​கிய பட்​டியல் www.dge.tn.gov.in என்ற இணை​யளத்​தில் இன்​று பிற்​பகல் வெளியிடப்​படு​கிறது.

55

பட்​டியலில் இடம் ​பெறாத பதிவெண்​களுக்​கான விடைத்​தாள்​களில் எவ்​வித மதிப்​பெண் மாற்​ற​மும் இல்​லை. மறுகூட்​டல் அல்​லது மறுப்​பீட்​டில் மதிப்​பெண் மாற்​றம் உள்ள தேர்​வர்​கள் மட்​டும் இன்று பிற்​பகல் முதல் மேற்​குறிப்​பிட்ட இணை​யதளத்​தில் தற்​காலிக மதிப்​பெண் சான்​றிதழை பதி​விறக்​கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories