Published : Apr 19, 2025, 01:10 PM ISTUpdated : Apr 19, 2025, 03:17 PM IST
Tamilnadu Government order to School Teacher: தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெறும். அரசு தேர்வுகள் இயக்ககம் விடைத்தாள் திருத்தும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
TN School Teacher: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்ரல் 4ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.
27
Teachers have begun evaluation work
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள்
பொதுத்தேர்வு முடிந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பும் பணி நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் லதா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்: பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் அனுபவம் மிக்க ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். உதவி விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் வரும் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தும்பணியில் ஈடுபடுவர். தமிழ் வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தமிழ் வழி தேர்வு விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் திருத்தம் செய்ய வேண்டும்.
விடைத்தாள் திருத்தும் மையத்தில் நடைபெறும் எந்தவொரு குளறுபடிக்கும் மையத்தின் அலுவலரே முழுப் பொறுப்பாவார். விடைத்தாள் திருத்தும் மையம் கடுமையான நிபந்தனைகளுடன் செயல்படுவதை உறுதி செய்வது மைய அலுவலரின் கடமையாகும். விடைத்தாள் திருத்தும் பணியின் போது மைய அலுவலர் இல்லாமல் எந்தப் பணிகளும் நடைபெறக் கூடாது. இதனை மீறும் விடைத்தாள் திருத்தும் அலுவலரின் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் கட்டுகளை பிரித்துக் கட்டும் போது சிசிடிவி மூலம் கண்காணிக்க வேண்டும்.
57
10th paper correction
ஆசிரியர்கள் கவனமாக விடைத்தாள்களை திருத்த வேண்டும்
கடந்த கல்வி ஆண்டில் முதன்முறை மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்களை விடவும், மறுகூட்டலில் அதிக மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் முதன் முறை மதிப்பீடு செய்யும் போதே ஆசிரியர்கள் கவனமாக விடைத்தாள்களைத் திருத்த வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைத்து விடைத்தாள்களும் விடைக்குறிப்பின் படி எந்த பதிலும் விடுபடாமல் திருத்தப்பட்டுள்ளதா? என்பதை முதன்மைத் தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.
67
TN education updates
அரட்டை அடிக்க கூடாது
விடைத்தாளில் மதிப்பீடு செய்யப்படாத பகுதிகள், மாணவர்களால் விடைத்தாள் நகல் பெறும்போதோ அல்லது மறுக் கூட்டலின் போதோ கண்டறியப்பட்டால், முதன்மைத் திருத்தும் அலுவலராக நியமிக்கப்பட்ட ஆசிரியர் தமது கடமையிலிருந்து தவறியவராக கருதப்படுவார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விடைத்தாள் திருத்தும் மையத்தில் உதவித் தேர்வாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தம் செய்யும் போது பரஸ்பரம் பேசிக் கொண்டோ அரட்டை அடித்துக் கொண்டோ இருக்க கூடாது.
77
cell phone ban
செல்போன் பயன்படுத்த தடை
மேலும் அவர்கள் விடைத்தாள் திருத்தும் பணியின்போது எந்த காரணத்தை கொண்டும் செல்போன்களை பயன்படுத்த கூடாது. எச்சரிக்கையை மீறி உதவி தேர்வளார்கள் செல்போன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.