Published : Apr 19, 2025, 12:02 PM ISTUpdated : Apr 19, 2025, 12:16 PM IST
Tamilnadu Governor RN Ravi: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், சட்டமன்ற மசோதாக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து ஆளுநர் டெல்லி சென்றுள்ளார்.
Tamilnadu Governor RN Ravi: தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி எப்போது நியமிக்கப்பட்டாரோ அன்று முதல் தமிழக அரசுடனான மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்சமடைந்து வந்தது. இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
24
Supreme Court condemns Governor R.N. Ravi
உச்சநீதிமன்றம் கண்டனம்
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு கடந்த 8ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். குடியரசுத் தலைவருக்கு மசோதாக்கள் அனுப்பியதை ரத்து செய்தும், சட்டப்பிரிவு 142-ன் கீழ் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியும் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்தனர். மேலும் மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
34
CM Stalin
மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி
இந்த தீர்ப்பு தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
44
Governor RN Ravi meets Vice President Jagdeep Dhankar
குடியரசு துணைத் தலைவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து ஆலோசிப்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது ஆளுநர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.