பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு! அதிமுகவில் இருந்து முக்கிய கட்சி வெளியேறியது! அதிர்ச்சியில் இபிஎஸ்!

Published : Apr 19, 2025, 09:58 AM ISTUpdated : Apr 19, 2025, 10:30 AM IST

AIADMK-BJP Alliance: பாஜக கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என எஸ்டிபிஐ கட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

PREV
15
பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு! அதிமுகவில் இருந்து முக்கிய கட்சி வெளியேறியது! அதிர்ச்சியில் இபிஎஸ்!
AIADMK-BJP Alliance

AIADMK-BJP Alliance: இனி எந்த காலத்திலும் பாஜக கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இபிஎஸ் டெல்லி சென்று வந்த கையோடு அதிமுக பாஜக கூட்டணி உறுதியானது. இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்தனர். இந்நிலையில் அதிமுகவுடன் பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள இஸ்லாமிய நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகி வருகின்றனர். 

25
SDPI leaves AIADMK alliance

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய  எஸ்டிபிஐ

இந்நிலையில் அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து  எஸ்.டி.பி.ஐ. கட்சி விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டம். பாஜகவை எதிர்க்கக்கூடிய அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது பாஜக கூட்டணிக் கட்சிகளை எஸ்டிஐ கட்சி அங்கீகரிக்காது. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பாஜகவின் முழக்கமாக இருந்தது ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள் இப்போது முழக்கம் எங்கே போனது?

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி! துப்பாக்கி முனையில் நடந்த கட்டாயத் திருமணம்! கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

35
Edappadi Palanisamy

பாஜக யார் காலிலும் விழுவார்கள்

அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து நேரம் கொடுத்து எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும். பாஜகவுக்கு இது கைவந்த கலை, தனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள். நீதி நேர்மை நியாயம் அனைத்தையும் துறந்து சாணக்கிய தத்துவ  அடிப்படையில் எந்த எல்லைக்குப் போவார்கள், அந்த அடிப்படையில்  அதிமுகவை கபிலிகரம் செய்திருக்கிறார்கள். பாஜகவை பொறுத்த வரையில் தனக்குச் சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள் தனக்குத் தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள் அதுதான் அவர்களின் நிலைப்பாடு.

45
SDPI Vs AIADMK

தமிழ்நாடு ஒரு அரசியல் கட்சியை இழக்கப்போகிறது

எங்கெல்லாம் பாஜக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறதோ அங்கு இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகளுடன் அழிந்துபோனதாகத் தான் வரலாறு இருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அந்த வழியில் தமிழ்நாடு ஒரு அரசியல் கட்சியை இழக்கப்போகிறது என்பது உண்மை. இந்த முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து கதவுகளையும் சாத்திவிட்டதால் வாசலில் படுத்துக் கிடந்தார்கள், எந்த வாசலாவது திறக்காதா, எந்த ஜன்னல் ஆவது திறக்காதா என பாஜக தவம் கிடந்தார்கள். இப்போது  நிர்ப்பந்தம் நெருக்கடியில் கூட்டணியை நோக்கி மிதந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க:  பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு.! அடுத்தடுத்து விலகும் அதிமுக நிர்வாகிகள்- இபிஎஸ் ஷாக்

55
Edappadi Palanisamy Shock

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும்

அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து விடுவித்து, கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும். பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும், விலக்கிவிட வேண்டும்.
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பாஜகவை வெறுக்கிறார்கள். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியில் வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். நாங்கள் நிச்சயமாக ஒரு கூட்டணிக் கட்சியில் இருப்போம், எந்த கட்சி என்பது குறித்து 9 மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories