Kodaikanal : கொடைக்கானலில் கட்டாயம் செல்ல வேண்டிய 10 இடங்கள் - அதன் சிறப்பம்சங்கள் இதோ !!

Published : Dec 30, 2022, 08:05 PM IST

Kodaikanal : கொடைக்கானல் மலைவாசஸ்தலங்களின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி மலையின் பழனி மலையில் அமைந்துள்ள அழகிய மலைவாசஸ்தலம் ஆகும். கொடைக்கானல் தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் கொடைக்கானலில் பார்க்க வேண்டிய சிறந்த 10 இடங்களை இங்கு காண்போம்.

PREV
110
Kodaikanal : கொடைக்கானலில் கட்டாயம் செல்ல வேண்டிய 10 இடங்கள் - அதன் சிறப்பம்சங்கள் இதோ !!

1.கொடைக்கானல் ஏரி

கொடைக்கானல் ஏரி, 1863-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால், உருவாக்கப்பட்டது. நட்சத்திரவடிவில் இந்த ஏரியை ஆங்கிலேயர்கள் அமைத்ததால், இதற்கு நட்சத்திர ஏரி என்ற பெயரும் உண்டு. காஷ்மீர் தால் ஏரியைப் போலவே, கொடைக்கானல் ஏரி சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான இடம்.

210

2.பசுமை பள்ளத்தாக்கு

ஆங்கிலேயர்கள் கிரீன் வேலி வியூ பாயிண்ட் என பெயர் இட்டுள்ளனர்.   இதற்குத் தமிழில் பசுமை பள்ளத்தாக்கு பார்வை முனை எனப் பெயராகும்.   ஆனால் இந்த பகுதிக்குத் தற்கொலை முனை அதாவது சூயிசைட் பாயிண்ட் என இன்னொரு பெயர் உண்டு.  பலரும் அவ்வாறே அழைத்து வருகின்றனர். இந்த இடத்தில் பணி புரிந்த அரசு அதிகாரி ஒருவருக்கு இந்த பெயர் சிறிதும் பிடிக்காமல் இருந்தது.

310

3.வெள்ளி நீர்வீழ்ச்சி

 கொடைக்கானலில் உள்ள மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றை நீங்கள் பார்க்க விரும்பினால், நீங்கள் வெள்ளி அருவிக்கு செல்ல வேண்டும். 18 -அடி உயரமான பாறையில் இருந்து நீர்வீழ்ச்சி வழியாக விழுவதால் நீர் உண்மையில் வெள்ளி நிறத்தில் தெரிகிறது. இதனால் சில்வர் கேஸ்கேட் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுவதுண்டு. சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இது.

410

4.கோக்கர்ஸ் வாக்

1872-ஆம் ஆண்டு இந்த இடத்தை கண்டுப்பிடித்த லெப்டினென்டு கோக்கரின் பெயராலேயே இவ்விடம் அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் ஏரியிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரம் தொலைவில் கொடைக்கானலின் தெற்குச் சரிவில் அமைந்துள்ளது. மேகங்களின் மீது நடப்பது போன்ற உணர்வை பெறுவீர்கள்.

510

5.குறிஞ்சி ஆண்டவர் கோயில்

குறிஞ்சி ஆண்டவர் கோயில், கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. 12 ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும் அறிய வகை பூவான குறிஞ்சி பூக்கள் இந்த இடத்தில் பூத்துக் குலுங்குகின்றன. எனவே இந்த இடம் இதற்கு புகழ் பெற்றது. இக்கோயில் ஸ்ரீ குறிஞ்சி ஈஸ்வரன் என்றழைக்கப்படும் முருக கடவுளுக்காக அமைக்கப்பட்ட கோயில். 1936-ஆம் வருடம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

610

6.தூண் பாறை

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று தூண் பாறை. தூண் பாறைகள் இடையினில் தவிழ்ந்து செல்லும் மேகக்கூட்டங்களை ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுட‌ன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்வார்கள்.

710

7.டால்பின் நோஸ்

கொடைக்கானலில் உள்ள டால்பின் மூக்கு என்று அழைக்கப்படும் மிக உயரமான பாறை பகுதி சென்று பார்த்தல், இயற்கையின் அழகை அருமையாக ரசிக்கலாம். பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது.

810

8.பேரிஜம் ஏரி

கொடைக்கானலில் ஏரிகள் மிகவும் பிரபலமானது பேரிஜம் ஏரி. இந்த அழகான ஏரி பாதுகாக்கப்பட்ட பகுதியில், ஆழமான காடுகளுக்கு பின்னால் மறைந்துள்ளது. இந்த ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு நீங்கள் சில சமயங்களில் வனவிலங்குகளை கூட பார்த்து ரசிக்கலாம்.

910

9.பிரையண்ட் பூங்கா

கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா மிஸ் பண்ணக்கூடாத இடங்களில் முக்கியமான இடமாகும். இந்த தாவரவியல் பூங்கா நூற்றுக்கணக்கான அழகான தாவரங்கள் மற்றும் மலர்களைக் கொண்டுள்ளது. இந்த பூங்காவை பார்வையிட சிறந்த நேரம் கோடைக்காலம், முக்கியமாக மே மாதத்தில், அந்த நேரத்தில் பூங்காவில் ஒரு பெரிய தோட்டக்கலை கண்காட்சி இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1010

10.பைன் காடு

சுமார் 60 முதல் 80 அடி வரை வளரக்கூடிய இந்த மரங்கள் சூரிய ஒளி புக முடியாத அளவுக்கு அடர்த்தியாக இருக்கிறது.  தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளும் இப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. ப்ரீ வெட்டிங் சூட்டுக்கு வரும் இளம் ஜோடிகளை போட்டோகிராபர்கள் இங்கு அழைத்துவர மறக்கமாட்டார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories